June 18, 2026

Seithi Saral

Tamil News Channel

சி.ஏ.பி.எப். தேர்வு தமிழிலும் நடத்தப்படும்-அமித்ஷா அறிவிப்பு

1 min read

CAPF Exam will also be held in Tamil – Amit Shah announced

15.4.2023
நாடு முழுவதும் வருகிற 2024-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி சி.ஏ.பி.எப். தேர்வு நடைபெற உள்ளது. சி.ஏ.பி.எப். தேர்வு இந்தி, ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ் உள்பட 15 மொழிகளில் நடத்தப்படும் என்று உள்துறை மந்திரி அமித்ஷா அறிவித்துள்ளார்.

சி.ஏ.பி.எப். தேர்வு

நாடு முழுவதும் உள்ள பல்வேறு ஆயுதப்படைகளில் ஆட்களை சேர்க்க ஒவ்வொரு ஆண்டும் சி.ஏ.பி.எப். தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வு இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நடத்தப்பட்டு வந்தது.
நாடு முழுவதும் வருகிற 2024-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி சி.ஏ.பி.எப். தேர்வு நடைபெற உள்ளது.
இந்த நிலையில் சி.ஏ.பி.எப். தேர்வு இந்தி, ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ் உள்பட 15 மொழிகளில் நடத்தப்படும் என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அறிவித்துள்ளார். நாடு முழுவதும் 15 மொழிகளில் 2024-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி சி.ஏ.பி.எப். தேர்வு நடத்தப்படும் என்றும் மத்திய அரசின் முடிவால் காவலர் பணிக்கு தேர்வு எழுத உள்ள லட்சக்கணக்கானோர் பயனடைவர் என்றும் அமித்ஷா கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *