May 15, 2024

Seithi Saral

Tamil News Channel

குரங்கிடம் இருந்து செல்போனை மீட்ட கண்ணாயிரம்/ நகைச்சுவை கதை/ தபசுகுமார்

1 min read

Kannayiram who recovered the cell phone from Monkey/ comedy story/ Tabasukumar

15.4.2023
கண்ணாயிரம் குற்றாலத்தில் ஓட்டலில் தங்கியிருந்த போது திறந்த ஜன்னல் அருகே செல்போனை கால்சட்டைக்குள் போட்டு தொங்கவிட்டார். அதை தூக்கிச்சென்ற குரங்கு மரத்தில் மற்றொரு குரங்குடன் செல்போனில் பேசிவிளையாடியபோது குரங்கு எங்கே இருக்கு என்று கண்டறிய பூங்கொடி கண்ணாயிரம் போனுக்கு வீடியோகால்பண்ண அதில் ஒரு குரங்கு சிரித்தபடி செல்போன் பார்ப்பதும் மற்றொரு குரங்கு கண்ணாயிரத்தின் கால்சட்டையை போட்டுக்கொண்டு கிளையில் தொங்கிவிளையாடு வதையும் பார்த்தார்.
அந்த குரங்குகள் மரத்தின் உச்சியிலிருந்து கீழே இறங்கிவருவதை வீடியோகாலில்பார்த்த கண்ணாயிரம் மகிழ்ச்சியில் ஆ என்று கத்த அந்த சத்தம் கேட்ட குரங்குகள் மீண்டும் மரத்தின் உச்சிக்கு சென்றன.
இதனால் எரிச்சலான பூங்கொடி ஜார்ஜ் இறங்கிடும் என்று செல்போனை ஆப்செய்தார். குரங்கை பார்க்கமுடியாமல் கண்ணாயிரம் என்ன இது நாம பண்ணுறது எல்லாம் இடக்கு மடக்கா இருக்கு என்று விழித்தபடி பூங்கொடி இனிநான் சத்தம்போடமாட்டேன் என்றார்.
உடனே பூங்கொடி..ஏங்க..ஐந்து நிமிடம் அமைதியா இருங்க..அப்பதான் ஆள் இல்லைன்னு நினைச்சிக்கிட்டு குரங்கு கீழே இறங்கிவரும்.. அப்போ நாம செல்போனை பிடுங்கிடலாம் என்க கண்ணாயிரம் பதட்டமாக..பூங்கொடி அப்படி செஞ்சா உன்னை குரங்கு கடிச்சிடும் என்றார்.
பூங்கொடியோ..ம்..உங்க போன்தானே நீங்கதான் குரங்கிடமிருந்து அதை பிடுங்கணும் .குரங்கு உங்களைத்தான் கடிக்கும் என்று சொன்னார்.
கண்ணாயிரம் பதில் பேசாமல் அமைதியாக இருந்தார். ஐந்து நிமிடம் கழிந்தது.கண்ணாயிரம் மெல்ல..பூங்கொடி ஐந்து நிமிடம் ஆகியிருக்கும்.. செல்போனை ஆன்பண்ணு.. குரங்கு தெரியும் என்க பூங்கொடியும் சரி..போனா போகுது என்று செல்போனை ஆன்பண்ணி வீடியோ கால் செய்தார்.
எல்லோரும் ஆவலுடன் மரத்தில் குரங்கு தெரிகிறதா என்று பார்த்தபோது குரங்கை காணவில்லை.
என்ன ஆச்சு..குரங்குவரலை எங்கே போச்சு என்று சுற்றி சுற்றிப்பார்த்தனர்.
திடீரென்று ஒரு குரங்கு கையில் செல்போன் பார்த்தபடி நடந்துவர மற்றொரு குரங்கு அதன்பின்னால் நடந்துவருவது தெரிந்தது.. ஆ..குரங்கு மரத்தைவிட்டு இறங்கிட்டு..ஆ..ஓட்டலை நோக்கி நடந்துவருது என்று பூங்கொடி சொல்ல எல்லோரும் ஓட்டல் நுழைவாயிலை பார்த்தார்கள்.
இரண்டு குரங்குகளும் சிரித்தபடி .ஹாயாக வந்து கொண்டிருந்தன. அதைப்பார்த்ததும் எல்லோரும் பயந்தபடி…அய்யோ ரூமுக்குள் வந்திடும்போல…ஓடுங்க கதவை பூட்டுங்க என்றபடி ஓடினார்கள்.
கண்ணாயிரம்..அங்கேயே நின்றார். பூங்கொடி அவரிடம் வாங்க வாங்க..ரூமுக்குள் ஓடிடுவோம் என்று கண்ணாயிரத்தை இழுத்துக்கொண்டு ரூமுக்குள் ஓடிவந்து கதவை பூட்டினார்.
கண்ணாயிரம்..ஏன் பூங்கொடி..குரங்குகிட்ட சமாதானம் பேசி செல்போனை வாங்கிடலாமுல்லா என்க…குரங்குகிட்ட சமாதானமா…அது நடக்காதீங்க…சும்மா இருங்க.. ஜன்னலை பூட்டுங்க என்று கத்தினார்.
கண்ணாயிரமும் ஓடிப்போய் ஜன்னலை பூட்டினார்.பூங்கொடி…குரங்கு எங்கே நிக்குதுன்னு எப்படி பாக்கிறது..என்று கேட்க வீடியோஹாலில் பாத்துக்கிடலாமுங்க…சத்தம் காட்டாம இருங்க என்று அதட்டினார்.
குரங்குகள் ஓட்டல் வராண்டாவில் நடந்துவந்தன. ஆ..இங்கே பாருங்க…இங்கேபாருங்க..ஓட்டல் ரூம் கதவு பூட்டிக்கிடக்கிறதை பார்த்தபடி குரங்குவருவதை பார்த்தார்கள்.
அப்போது சுடிதார்சுதா ஜன்னலை மெல்ல திறந்து எட்டிப்பார்த்தார். குரங்கு அவளது அறை ஜன்னலுக்கு கீழே நின்று கொண்டிருந்தது. ஜன்னல் பக்கத்தில் சுடிதார்சுதா தனது செல்போனை ஜார்ஜ்போட்டிருந்தார்.
குரங்கை கண்டதும் அவள் ஜன்னலை மூட முயற்சிக்க ஒரு குரங்கு ஜன்னலில் ஏறி ஜன்னல் கதவை மூட விடாமல் தடுத்தது.
என்னடா இது வம்பா போச்சு என்று சுடிதார் சுதா ஜன்னல் கதவை தள்ள…குரங்கோவிடவில்லை.
சுடிதார்சுதா ஜார்ஜ் போட்டிருந்த செல்போனை பிடுங்கி எறிந்துவிட்டு கண்ணாயிரம் செல்போனுக்கு ஒயரை சொருகி ஜார்ஜர் போட்டுவிட்டு ஜார்ஜ் ஏறட்டும் பின்னர்வந்து எடுத்துக்கொள்ளலாம் என்று இரண்டு குரங்குகளும் வீரநடை நடந்து சென்றன.
இதை வீடியோ ஹாலில் பார்த்த பூங்கொடி…ஏங்க..உங்க செல்போனை சுடிதார்சுதா ஜார்ஜரில் ஜார்ஜ்போட்டுவிட்டு குரங்கு போயிட்டு.. அது திருப்பிவருவதற்குள் ஓடிப்போய்வாங்கிட்டு வந்திடுவோம் என்றார்.
கண்ணாயிரமும் சரி..சரி..சீக்கிரம் கிளம்பு என்று கதவை திறந்து பின்னர் பூட்டிவிட்டு சுடிதார்சுதா அறையை நோக்கி ஓடினார்கள்.
பூங்கொடி சுடிதார்சுதாவுடன் பேசமாட்டார் என்பதால் கண்ணாயிரத்திடம்.. ஏங்க..உங்க போன்தானே..நீங்களே சுடிதார்சுதாவிடம் கேளுங்க.. என்க..கண்ணாயிரம் தன்குரலை சரிசெய்தபடி…சுடிதார்சுதா.. சுடிதார்சுதா.. பூங்கொடி உங்கிட்ட பேசமாட்டால்லா.. அதனால.. என்னை உங்கிட்டபேசி செல்போனை வாங்கசொன்னா என்றார்.
சுடிதார்சுதாவோ…ம்..பூங்கொடி நேரடியாக கேட்டால்தான் நான் செல்போனை தருவேன் என்க.. கண்ணாயிரம் இது என்ன சிக்கலாக இருக்கு..போனு என்போன்தானே.. நான்கேட்டா தரவேண்டியதுதானே என்று சொல்ல சுடிதார்சுதாவோ…ம்..பூங்கொடி கேட்டால்தான் தருவேன் என்று சொல்ல பூங்கொடி கோபத்தில். ஏய்கொடு டி.. சும்மா பந்தாபண்ணாதே என்க.. சுடிதார்சுதா சிரித்துக்கொண்டே கண்ணாயிரத்திடம் அவரது செல்போனை கொடுத்தார்.
அப்பாட..தப்பிச்சோம் என்றபடி கண்ணாயிரம் செல்போனுடன் தனது அறைக்குள் ஓட பூங்கொடியும் அவர் பின்னால் ஓடிவந்தார்.
அப்போது செல்போன்ஜார்ஜ் போட்டுவிட்டு சென்ற இரண்டு குரங்குகளும் ஜார்ஜ் ஏறியிருக்கும் என்று அந்த செல்போனை எடுக்க திரும்பிவந்தன. அதைப்பார்த்த பூங்கொடியும் கண்ணாயிரமும் பயந்துபோய் கதவை பூட்டினார்கள்.
குரங்கு செல்போன்ஜார்ஜ் போட்ட இடம் தேடிவந்தன. திறந்துகிடந்த ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்து செல்போனை காணாமல் அங்கு தொங்கிக்கொண்டிருந்த ஜார்ஜர் ஒயரை பிடுங்கி தோளில் போட்டுக்கொண்டு சென்றன.
சுடிதார்சுதா அய்யோ ஜார்ஜர் ஒயர்போச்சே என்று கத்தினார்.
தலைக்குவந்தது தலைப்பாகையோடு போச்சு என்று தன்னை சமாதானப்படுத்திக்கொண்டாள்.
ஜன்னலை பூட்டிவிட்டு தலையில் கைவைத்தபடி அமர்ந்தாள்.
பூங்கொடியோ கண்ணாயிரத்தின் செல்போன் கிடைத்த மகிழ்ச்சியில்..அப்பா..ஒருவழியாக செல்போன் கிடைச்சிட்டு என்று மகிழ்ச்சி அடைந்தார்.
கண்ணாயிரம் அந்த செல்போனில் கண்ணாடி கீறியிருப்பதை பார்த்து..பூங்கொடி..வீடியோஹாலில் பாக்கும்போது என் போனு நல்லாத்தானே தெரிஞ்சுது.. இப்போ போன் கண்ணாடி கீறியிருக்கே என்க..பூங்கொடி கோபத்தில் ஏங்க..போன்கிடைச்சதே பெரிய விசியம்..இதிலே அதுபோச்சு..இதுபோச்சு என்கிறீயள…சும்மா கிடங்க..துண்டு காஞ்சிட்டா…பெட்டியிலே இருந்து கைலியை எடுத்துகட்டுங்க..வேட்டிக்கும் உங்களுக்கும் ராசியில்ல..என்று சொல்ல…கண்ணாயிரம் எதோ யோசனைவந்தவராய்..பூங்கொடி..ஒண்ணை மறந்திட்டோமே..செல்போனை வாங்கிட்டோம்..குரங்கிடமிருந்து என்கால்சட்டையை வாங்கலையே ..அதுக்கு என்ன செய்ய என்று கேட்க..பூங்கொடி..பற்களை கடித்தபடி…அதுதான் குறைச்சல்..அது கால்சட்டைதானே..முழுசட்டையில்லையே ..சும்மா அழாம இருங்க என்றார்.
கண்ணாயிரமோ…பூங்கொடி…அது முழுசட்டைதான்..கால்வழியா போடுறதால கால்சட்டைன்னு சொல்வாங்க தெரியுதா என்க பூங்கொடி..ம்..புரியுது..அந்த கால்சட்டையை மறந்திடுங்க..குரங்குபோட்ட சட்டை வேணுமா ..ச்சீ…என்க கண்ணாயிரம் அப்போ அது வேண்டாமா..ஏற்கனவே வேட்டி போச்சு…இப்போ கால்சட்டையும் போச்சா..இன்னும் என்ன என்ன ஆகப்போகுதோ என்று கன்னத்தில் விரல்வைத்தார்.(தொடரும்)
-வே.தபசுக்குமார்.புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.