June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

குருப்பெயர்ச்சி பலன்கள் 2023-கடகம்

1 min read

Guru peyarchi Palankal 2023/ Kadagam/Cancer

ஆடம்பர பொருளைக்கூட அவசியமானல் தயக்கமின்றி வாங்கும் குணம் கொண்ட கடக ராசி அன்பர்களே! நீங்கள் அன்புக்கு என்றென்றும் கட்டுப்பட்டவர்கள். இதுவரை குருபகவான் 9-ம் இடத்தில் இருந்து பல்வேறு நன்மைகளை செய்து கொண்டிருந்தார். குறிப்பாக எடுத்த காரியத்தில் பல்வேறு வெற்றிகளை தந்திருப்பார். இப்போது குருபகவான் 10-ம் இடத்திற்கு அடியெடுத்து வைத்திருக்கிறார். இது சிறப்பான நிலை என்று சொல்ல முடியாது. முன்பு போல் அவரால் நல்ல பலன்களை அள்ளிதர முடியாது. 10-ம் இடத்தில் குரு பற்றி ஜோதிடத்தில் ஈசனாரொருபத்திலே தலையோட்டிலே யிரத்துண்டதும், என்று கூறப்படுகிறது. அதாவது குரு 10-ல் இருக்கும் போது சிவன் பிச்சை எடுத்தார் என்பது பொருளாகும். இதை கண்டு நீங்கள் சஞ்சலம் கொள்ள வேண்டாம். காரணம் அது தெய்வீக ஜாதகம். மேலும் அதன்கிரக நிலைவேறு உங்கள் கிரக நிலைவேறு. பொதுவாக 10-ம் இடத்தில் இருக்கும் குரு பகவான் பொருள் நஷ்டத்தையும், மனசஞ்சலத்தையும் ஏற்படுத்துவார். குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது 5-ம் இடத்துப் பார்வை மிக சிறப்பாக இருக்கிறது. அதன் மூலம் எந்த இடையூறையும் உடைத்தெறிந்து முன்னேற்றம் காணலாம். மேலும் 11-9-2023 முதல் 4-12-2023 வரை வக்கிரம் அடைகிறார்.அவர் வக்கிரத்தில் சிக்கும் போது கெடுபலனை தரமாட்டார் மாறாக நன்மையே தருவார். குருபகவான் வக்கிரம் அடைந்தாலும், அதாவது பின்னோக்கி நகர்ந்தாலும் மேஷ ராசிக்குள்ளேயே இருக்கிறார்.
மற்றகிரகங்களின் நிலை
கோச்சாரபலனை கணிக்கும்போது, மற்ற முக்கிய கிரகங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
முக்கிய கிரகங்களில் ஒன்றான சனிபகவான் தற்போது 7-ம் இடமான மகர ராசியில் உள்ளார். இது சிறப்பான இடம் அல்ல. பொதுவாக இந்த இடத்தில் இருக்கும் போது சனி குடும்பத்தில் பல்வேறு பிரச்சினையை உருவாக்கி இருப்பார். அலைச்சல் அதிகரிக்கும் வெளியூர் வாசம் நிகழ்ந்து இருக்கும். இந்த நிலையில் சனிபகவான் 20-12-2023 அன்று 8-ம் இடமான கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.8-ம் இடமான அஷ்டமத்தில் சனியால் எப்படி நன்மை தர முடியும்? இங்கு அவர் உங்கள் முயற்சிகளில் பல்வேறு தடைகளை உருவாக்குவார். உறவினர்கள் வகையில் மனக்கசப்பும் கருத்துவேறுபாடும் ஏற்படும். சிலர் ஊர்விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகும்.- இவையெல்லாம் அஷ்டமத்து சனியின் பொதுவான பலன்தான்.
தற்போது ராகு தற்போது உங்கள் ராசிக்கு10-ம் இடமான மேஷத்தில் இருப்பது சிறப்பான இடம் இல்லை. அவரால் சிலர் பொல்லாப்பை சந்திக்க நேரிடலாம். பெண்கள் வகையில் இடையூறுகள் வரலாம். அவர் 8-10-2023அன்று 9-ம் இடமான மீன ராசிக்கு மாறுகிறார். இதுவும் சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது.ஆனால் பலாபலன்கள் மாறுபடும்.உங்கள் திறமையில் இருந்த பின்தங்கிய நிலை இனி இருக்காது. அவரால் காரியத்தில் சிற்சில தடைகளை உருவாக்கலாம். எதிரிகளின் இடையூறு தலைதூக்கும். அதற்காக கவலை-கொள்ள தேவை இல்லை காரணம் அவரின் 4,7, மற்றும் 11-ம் இடத்துப் பின்னோக்கிய பார்வைகள் சிறப்பாக அமைந்து உள்ளது. அதன்மூலம் எந்த பிரச்சினையையும் முறியடித்து வெற்றிக்கு வழிகாணலாம்.
கேது தற்போது 4-ம் இடமான துலாம் ராசியில் இருக்கிறார். இந்த இடத்தில் இருக்கும் போது அவரால் தீயோர் சேர்க்கைக்கு ஆளாகி அவதியுற -லாம். ஆனால் கேதுவின் பின்னோக்கிய 11-ம் இடத்துப் பார்வை உங்கள் ராசிக்கு 6-இடமான தனுசு ராசியில் விழுகிறது. இதனால் இது சிறப்பான அம்சமாகும். இதன்மூலம் உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும். பொருளாதாரவளம் அதிகரிக்கும்.எந்த பிரச்சினையையும் முறியடிக்கும் வல்லமையை பெறலாம். அவர் 8-10-2023அன்று 3-ம் இடமான கன்னி ராசிக்கு வருகிறார். இது சிறப்பான இடம். அங்கு அவர் நற்பலனை தருவார். இறை அருளையும், பொருள் உதவியையும் கொடுப்பார். மேலும் உடல் உபாதைகளை குணமாக்குவார்.
மேற்கண்ட கிரகங்களின் நிலையை கொண்டு விரிவான பலனை காணலாம்.
குரு சாதகமற்ற நிலைக்கு சென்றாலும் அவரின் 5-ம் இடத்துப்பார்வை சாதகமாக அமைந்துள்ளது. குருவின் பார்வை பலத்தால் எந்த ஒரு காரியங் -களையும் வெற்றிகரமாக நிறை வேற்றலாம். உங்களுக்கு கிடைக்கும். பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். இதுவரை இருந்த மந்த நிலை மாறும். துணிச்சல் பிறக்கும். பண வரவு கூடும். தேவையான பொருட்களை வாங்கலாம். அண்டைவீட்டார்களின் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரண் அடையும் நிலை ஏற்படும். அக்கம் பக்கத்தினர் உங்களை புகழ்வர்.
உத்தியோகம் யாவரிடமும் அனுசரித்து போகவும்.வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிந்து செல்ல நேரிடலாம். ஆசிரியர்களுக்கு குருவின் பார்வை பலத்தால் கோரிக்கைகள் நிறைவேறி மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். அரசு வேலையில் இருப்பவர்கள் யாருடைய உதவியையும் நாடாமல் தன் கையே தனக்கு உதவி என்ற எண்ணத்தில் உழைத்து முன்னேறுங்கள். இருப்பினும் வழக்கமாக கிடைக்க வேண்டிய சம்பளஉயர்வு, பதவிஉயர்வுக்கு தடையேதும் இல்லை.மருத்துவர்கள் உங்கள் பொறுப்புகளை தட்டி கழிக்காமல் செய்யவும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். இனம் தெரியாத பெண்கள் வகையில் தொல்லைகள் வர வாய்ப்பு உண்டு.சற்று ஒதுங்கி இருக்கவும். வக்கீல்கள் வேலையில் பொறுமையும் நிதானமும் தேவை.
வியாபாரம்: பகைவர்களின் தொல்லைகள் உங்களுக்கு தடையைத் தந்தாலும் பொருளாதார வகையில் எந்த பின்தங்கிய நிலையும் வராது. தொழில் ரீதியாக வெளியூர் பயணம் ஏற்படலாம். குடும்ப பிரச்சினையை தொழிலில் காட்டாமல் இருந்தால் நல்ல முன்னேறம் அடையலாம்குருவின் பார்வை பலத்தால் போதிய வருமானம் கிடைக்கும். அறிவைபயன்படுத்தி தொழிலை வளர்ச்சி அடைய வைக்கலாம்.பத்திரிகை தொழில், தானிய வியாபாரம், தங்கம், மற்றும் உலோக வியாபாரம் சிறப்பாகஅமையும். சனிபகவான் சாதகமற்ற நிலையில் இருப்பதால் அலைச்சல் அதிகரிக்கும். சிலர் தீயோர் சேர்க்கைக்கு ஆளாகலாம். எனவே யாரிடமும் பார்த்து எச்சரிக்கையுடன் பழகவும்.
கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக் -கும். சமூகநல சேவகர்கள் எதிர்பார்த்த பாராட்டு கிடைக்கும். அரசியல்வாதிகள் பிரதிபலனை எதிர்பாராமல் உழைக்க வேண்டியதிருக்கும்.
மாணவர்களுக்கு முயற்சி எடுக்க வேண்டியதிருக்கும். ஆசிரியர்களின் அறிவுரையை கேட்டு நடக்கவும்.
விவசாயம்: சிறப்படையும். வருமானத்தில்குறை இருக்காது. கீரைவகைகள், காய்கறிகள், பயறு வகைகள், நெல், கொள்ளு, கொண்டைக் கடலை, மஞ்சள்,தக்காளி,பழவகைகள் போன்றவைகள் நல்ல மகசூலை கொடுக்கும் கால்நடை செல்வம் பெருகும்.
பெண்கள் குடும்பத்தில் உங்களின் அனுகுமுறை கண்டிப்பாக தேவைபடும். சகோதரர்கள் உறுதுணையாக இருப்பர். ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். வேலைக்கு செல்லும் பெண்ககள் கடுமையாக உழைக்க வேண்டியது இருக்கும். கோரிக்கைகள் நிறைவேறாமல் போகலாம்.அதேநேரம் உங்கள் வேலைக்குஏற்ற மரியாதை கிடைக்கும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். சிலர் இடமாற்றத்தை காணலாம். வெளியில் பலவேறு விஷயங்களில் பெருமையாக பேசப்பட்டாலும் வீட்டில் விட்டுக் கொடுத்து போவது நல்லது. இல்லையென்றால் வீண்மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள். சுயதொழில் செய்து வரும் பெண்களுக்கு பணப்புழக்கம் குறையாது. ஆனால் எதிலும் அதிக முயற்சி எடுக்க வேண்டியதிருக்கும். எதிரிகளின் தொல்லை அவ்வப்போது தலைதூக்கும்.
உடல்நலம்- ஒருவித பயம் ஆட்கொள்ளும். கேதுவால் வயிறு பிரச்சினை வரும். பயணத்தின் போது சற்று கவனம் தேவை.
பரிகாரம்- குருபகவானுக்கு மஞ்சள் நிற பூக்களால் அர்ச்சனை செய்யுங்கள்.பத்திரகாளியம்மனுக்கு எலுமிச்சை பழ விளக்கு ஏற்றி பூஜை செய்யவும். துர்க்கை வழிபாடு தடைகளை கடந்து உங்களை முன்னேற்றும். பெருமாள் கோவிலுக்கு தொடர்ந்து சென்று வாருங்கள். சாப்பிடும் முன்பு காக்கைக்கு அன்னமிடுங்கள்.
செப்டம்பர் மாதத்திற்கு பிறகு
கேது இறை அருளையும், பொருள் உதவியையும் கொடுப்பார். மேலும் உடல் உபாதைகளை குணமாக்குவார். தெய்வ அனுகூலம் கிடைக்கும் என்பதால் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாகவும், சிறப்பாகவும் அமையும். எதையும் வெற்றிகரமாக முடித்து காரிய அனுகூலத்தை காணலாம். மனதில் இருந்த உளைச்சல் அடியோடு நீங்கும். தேவையான பொருட்களை வாங்கலாம். உங்கள் மீதான பொல்லாப்பு மறையும். பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். ஆன்மிக ஆன்றோர்களின் ஆசியும், அருளும் கிடைக்கும். புதிய வீடு-மனை வாங்க யோகம் கூடி வரும்.11-9-2023 முதல் 4-12-2023 வரை குடும்பத்தில் கடந்த காலத்தைவிட மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள் கணவன்-மனைவி இடையே அன்பு, பாசம் இருக்கும்.
உத்தியோகம். போலீஸ், ராணுவத்தில் பணி- புரிபவர்கள் உயர்ந்த நிலையை அடைவர். புதிய பதவி கிடைக்கும். தனியார்துறையில் பார்ப்பவர்- களுக்கு 11-9-2023 முதல் 4-12-2023 வரை வேலைப்பளு குறையும். பதவிஉயர்வு கிடைக்கும். விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கும். சம்பள உயர்வு வரும்.ஏதோ காரணத்தால் வேலையை இழந்தவர்கள் மீண்டும் வேலை கிடைக்கப் பெறுவர். வேலையின்றி இருப்பவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு.அரசு வேலையில் இருப்பவர்களு -க்கு மேல் அதிகாரிகளின் ஆதரவு இருக்கும். வேலைப்பளு குறையும்.
வக்கீல்கள் எந்த விஷயத்திலும் முன்னெச்சரி- க்கையுடன் நடந்து கொள்வது சிறப்பு.பெண்கள் வகையில் இருந்த இடர்பாடுகள் டிசம்பர் 20-ந் தேதிக்கு பிறகு மறையும்.ஆனால் அதன் பிறகு பகைவர்களின் தொல்லை அதிகரிக்கும். குறையும். மருத்துவர்கள் சிறப்பான பலனை எதிர்நோக்கலாம். உங்கள் அதிகாரம் கொடி கட்டி பறக்கும்.
வியாபாரிகள் கேதுவால் நல்ல லாபத்தை பெற- லாம். வேலையின்றி இருப்பவர்கள் புதிய தொழிலை தொடங்கலாம். அதில் நல்ல வருமானம் கிடைக்கும். புதியவியாபாரம் ஓரளவு அனு கூலத்தை கொடுக்- கும்.ஆன்மிக சம்பந்தபட்ட மற்றும் பூஜை பொருள்ட் -கள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர்.பகைவர்கள் சரண் அடையும் நிலை ஏற்படும்.11-9-2023 முதல் 4-12-2023 வரை தங்கம், வெள்ளி, வைரம் நகைகள் வியாபாரம் செய்பவர்கள் நல்ல வருமானத்தை பெறுவர். அச்சகம், பத்திரிகை, பப்ளிகேசன், கட்டுமான ஆலோசகர் போன்ற தொழில் நல்ல வளர்ச்சியை அடையும். டிசம்பர் 20-ந் தேதிக்கு பிறகு பண விரயம் ஆகலாம். எனவே யாரையும் நம்பி பணத்தை ஒப்படைக்க வேண்டாம்.தொழில் ரீதியாக வெளியூர் பயணம் சென்றவர்கள் வீடு திரும்புவர். தீயோர்களின் தொல்லையில் இருந்து விடுபடுவீர் -கள்.உங்களை புரிந்து கொள்ளாதவர்கள் மனம் திருந்தி உங்களிடம் சரண் அடைவர்.
அரசியல்வாதிகள், பொதுநல தொண்டர்களுக்கு எதிர்பார்த்த பதவி கிடைக்கும். நற்பெயரும், புகழும் கிடைக்கப் பெறுவர். இதுவரை இருந்து வந்த தடை, தோல்வி இனி இருக்காது. கலைஞர்கள் பிரதிபலனை எதிர்பாராமல் உழைக்க வேண்டியது இருக்கும். மனதில் வருத்தம் உருவாகும்.வீண் அலைச்சல் ஏற்படும்.11-9-2023 முதல் 4-12-2023 வரை பணவரவு சிறப்பாக இருக்கும். புகழ்,பாராட்டு கிடைக்கும். புதிய ஒப்பந்தம் தாராளமாக வரும்.
மாணவர்கள்:சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். 11-9-2023 முதல் 4-12-2023 வரை கல்வியில் நல்ல வளத்தை காணலாம். ஆசிரியர்களின் அறிவுரை பயன் உள்ளதாக இருக்கும். வெற்றி கிட்டும். மதிப்பெண் கூடுதலாக கிடைக்கும். விரும்பிய பாடம் கிடைக்கும்.
விவசாயம்: மொச்சை, கடலை, கேழ்வரகு, நெல், மஞ்சள், சோளம், தக்காளி போன்ற பயிர்கள் மூலம் அதிக லாபத்தை காண்பர். புதிய சொத்து வாங்கும் வண்ணம் கைகூடும். நவீனஇயந்திரங்கள் வாங்க வாய்ப்பு உண்டு. வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும். தீர்ப்பு உங்கள் பக்கம் அமையலாம். 11-9-2023 முதல் 4-12-2023 வரை ஆடு, கோழி, பசு, கால்நடை வகையில் வருமானத்தை பெறுவர்.
பெண்கள் குடும்பத்தோடு புனிதஸ்தலங்களு-க்கு சென்று வருவீர்கள். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். குடும்ப முன்னேற்றத்திற்காக பொறுமையை கடைபிடிக்க வேண்டியதிருக்கும். பெண்காவலர்களுக்கு புதிய பதவி தேடி வரும். பூ வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர். அண்டை வீட்டார்கள் வகையில் மனக்கசப்பு ஏற்படும்.11-9-2023 முதல் 4-12-2023 வரை தடைபட்டு வந்த திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு. குழந்தை பாக்கியம் கிடைக்கும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். உங்களை புரிந்துகொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம். டிசம்பர் 20-ந் தேதிக்கு பிறகு உறவினர்கள் வகையில் மனக்கசப்பு வரலாம். அவர்களிடம் அதிக நெருக்கம் வேண்டாம் .வேலை நிமித்தமாகசிலர் ஊர்விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகும். தாயை பிரிந்து செல்லும் நிலை ஏற்படலாம்
உடல்நலம்:ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் வீடு திரும்புவர். பிள்ளைகள் நலம் மேம்படும்.
பரிகாரம்: சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுங்கள். சந்தர்ப்பம் கிடைக்கும்போது யானைக்கு கரும்பு கொடுங்கள். ராகு சாதகமற்ற நிலையில் இருப்பதால் பத்திரகாளியம்மனை வழிபட்டு வாருங்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *