May 19, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது

1 min read

It is said that there will be a change in the Tamil Nadu cabinet

30.4.2023
நிர்வாக வசதிக்காக அமைச்சர்கள் மற்றும் துறைச்செயலாளர்கள் மாற்றியமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமைச்சரவை மாற்றம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமைச்சரவை

தமிழக அமைச்சரவையில் இலாகாக்கள் மாற்றியமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடருக்கு பின் அமைச்சர்களின் செயல்பாடுகளை ஆராயும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் துறை செயலாளர்களின் இலாகாக்களை மாற்ற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமைச்சர்கள் செயல்பாடுகளின் அடிப்படையில் மாற்றம் செய்ய முடிவு செய்துள்ளதாகவும் மேலும் புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
நிர்வாக வசதிக்காக அமைச்சர்கள் மற்றும் துறைச்செயலாளர்கள் மாற்றியமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமைச்சரவை மாற்றம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தி.மு.க. ஆட்சியமைத்த பிறகு ஏற்கனவே 2 முறை அமைச்சரவையில் இலாகாக்கள் மாற்றியமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.