June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி நூலகத்தில் சிறுவர் புத்தக கண்காட்சி தொடக்கம்

1 min read

Children’s Book Fair begins at Tenkasi Library

10.5.2023
தென்காசி வஉசி வட்டார நூலகத்தில்
கோடை கொண்டாட்டம்
சிறுவர் புத்தக கண்காட்சி தொடக்கம் பள்ளி மாணவர்கள் கோடை விடுமுறையினை பயனுள்ள முறையில் கொண்டாடும் வகையில் துவங்கியது.

தென்காசி வஉசி வட்டார நூலகத்தில் சிறுவர் புத்தக கண்காட்சி கீபோர்டு பயிற்சி, சதுரங்கபயிற்சி, ஓவியப்பயிற்சி, ஆங்கில புலமை பயிற்சி நடத்தப்பட உள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற பயிற்சிகள் மூலம் கடந்த ஆண்டு மட்டும் 2600 பள்ளி மாணவர்கள் நூலக உறுப்பினர்களாக சேர்ந்து பெருமை சேர்த்துள்ளனர்.

அதுபோலவே இவ்வாண்டும் பள்ளி மாணவர்களை கோடை விடுமுறை நாட்களில் நூலகம் வருகைதர செய்து நூலகக் கல்வி மூலம் விழிப்புணர்வு அடையச்செய்து வாசிக்கும் பழக்கத்தை சிறு வயதிலேயே ஊக்குவிக்கும் விதமாக கோடை கால விடுமுறைக் கொண்டாட்டம் நூலகத்தில் நடத்தப்படுகிறது.

இதன் தொடக்க விழா மேலகரம் சக்தி கல்வி அகாடமி நிறுவனர் நீலகண்டன் தலைமையில் நடைபெற்றது. தேசிய பசுமைப்படை செயலாளர் சுற்றுச்சூழல் ஆர்வலர் பேராசிரியர் விஜயலெட்சுமி கோடை கொண்டாட்டத்தின் தொடக்க நிகழ்வாக சிறுவர் புத்தக கண்காட்சியினை தொடக்கி வைத்தார்கள். வட்டார நூலகர் பிரமநாயகம் வரவேற்றார். கேன்சர் சென்டர் நிர்வாக இயக்குநர் பாரதிராஜா, வட்டார கல்வி அலுவலர் இளமுருகன்,; இஎஸ்ஐ முன்னாள் மேலாளர் ராஜகோபால், நியூ செஞ்சூரி புக்அவுஸ் மேலாளர் பூர்ணா யேசுதாஸ் வாழ்த்துரை வழங்கினார். கிளை நூலகர் சுந்தர் நன்றி தெரிவித்தார்.

இந்த விழாவினை நூலகர்கள் ஜீலியா ராஜசெல்வி, நிஹ்மத் மதுன்னிஸா,வாசகர் வட்ட நிர்வாகிகள் சலீம் முகம்மது மீரான்,குழந்தைஜேசு, முருகேசன் செய்திருந்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *