June 13, 2026

Seithi Saral

Tamil News Channel

சேர்வைக்காரன்பட்டியில் ரூ.13.48 லட்சத்தில் குடிநீர் தொட்டி- அமைச்சர் கே.கே.எஸ்எஸ்.ஆர். அடிக்கல் நாட்டினார்

1 min read

Drinking water tank in Servaikaranpatti at Rs 13.48 lakh – Minister K.K.S.S.R. He laid the foundation stone

10.5.2023
தென்காசி மாவட்டம், கடையம் ஊராட்சி ஒன்றியம்,
சேர்வைக்காரன்பட்டி ஊராட்சியில் ரூ.13.48 லட்சத்தில் குடிநீர் தொட்டி கட்டிட அமைச்சர் கே.கே.எஸ்எஸ்.ஆர். ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டினார்.

குடிநீர் தொட்டி

கடையம் ஊராட்சி ஒன்றியம், சேர்வைக்காரன்பட்டி ஊராட்சியி;ல் தாமிரபரணி குடிநீர் வழங்கு வதற்காக ரூ.13 லட்சத்து, 48 ஆயிரம் மதிப்பீட்டில் ரூ.1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய குடிநீர் தொட்டி அடிக்கல் நாட்டு விழா, சிமெண்ட் சாலை திறப்பு விழா நடைபெற்றது.

தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை.இரவிச்சந்திரன் தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன் வரவேற்றார்.
தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பங்கேற்று அடிக்கல் நாட்டியும், சிமெண்ட் சாலையினை திறந்து வைத்தும் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன், திமுக ஒன்றிய செயலாளர்கள் மகேஷ்மாயவன், ஜெயக்குமார், யூனியன் சேர்மன் செல்லம்மாள், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வள்ளிச்செல்வம் ரவிச்சந்திரன், ஒன்றிய கவுன்சிலர் சங்கர், மாவட்ட பிரதிநிதி அய்யனுசாமி, கிளை செயலாளர்கள் ராஜேந்திரன், பொன்னுத்துரை, கே.செல்வராஜ், செல்வராஜ், வார்டு உறுப்பினர்கள் சந்தனரோஜா, ராஜா, தங்கராஜ், ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் முருகன், நடராஜன், கலைச்செல்வன், தேன்ராஜ், நவீன்கிருஷ்ணா, ராஜேந்திரன், கணேசன், கணபதிநாடார், மனோகர், நித்யா, ரேவதி, முப்புடாதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஊராட்சிச்செயலர் கதிரேசன் நன்றி கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *