கனிமவள கடத்தலை கண்டித்து குற்றாலத்தில் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் போராட்டம்
1 min read
B.R. Pandian’s protest in Courtalam against mineral smuggling
16.5.2023
தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவார மாவட்டங்களில் இருந்து கேரள மாநிலத்திற்கு கொண்டு செல்லப்படும் கனிமவளக் கடத்தலை கண்டித்து தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி ஆர் பாண்டியன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
கனிமவளம்
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி ஆர் பாண்டியன்
தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவார மாவட்டங்களில் இருந்து கேரள மாநிலத்திற்கு கொண்டு செல்லப்படும் கனிமவளக் கடத்தலை கண்டித்து தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் குற்றாலம் வந்த பி.ஆர்.பாண்டியன் தென்காசி மாவட்டம் புளியரை வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான கனரக ராட்சத வாகனங்களில் கனிம வளங்கள் கடத்தப்படுவதை கண்டித்து புளியறை பகுதியில் மறியல் போராட்டம் நடத்த ஏராளமான விவசாயிகளுடன் புறப்பட்டு சென்றார்.
தகவல் அறிந்த போலீசார் பி ஆர் பாண்டியன் மற்றும் அவரது ஆதரவாளர்களை தடுத்து நிறுத்தினார் அதனை தொடர்ந்து பி.ஆர் பாண்டியன் மற்றும் விவசாயிகள் குற்றாலம் செங்கோட்டை சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தென்காசி டிஎஸ்பி நாகசங்கர் போராட்ட குழுவினரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதனைத் தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
பேட்டி
முன்னதாக தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி ஆர் பாண்டியன் பத்திரிக்கையாளர்களிடம் பேசினார் அப்போது அவர் கூறியதாவது;-
தென்காசி திருநெல்வேலி கன்னியாகுமரி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் மாவட்டங்களில் கனிமவளக்கடத்தில் காரணமாக வனப்பகுதியில் உள்ள வன உயிரினங்கள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து விலை நிலங்களை சேதப்படுத்துவதுடன் மக்களை அச்சுறுத்தி வருகிறது.
தமிழகத்திலிருந்து நாள்தோறும் 2000 முதல் 4000 வரையிலான கனரக வாகனங்கள் மூலமாக கேரளாவிற்கு கனிம வளங்கள் கடத்திச் செல்லப்படுகிறது கனிமவள கடத்தலை கண்டித்து தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் சார்பில் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்படும்.
தமிழக அரசு நெல் கொள்முதல் விலையாக டன் ஒன்றுக்கு 3000 கரும்பு கொள்முதல் விலையாக டன் ஒன்றுக்கு ரூபாய் 5000 வழங்க வேண்டும் முல்லைப் பெரியாறு அணையில் மத்திய தொழில் பாதுகாப்பு படை பாதுகாப்பு அளிக்க வேண்டும் அணையின் உயரத்தை 152 அடியாக உயர்த்தும் வகையில் அணைகளின் கட்டுமான பணிகளை மேற்கொள்ள வேண்டும் இதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து தமிழக உரிமைகளை மீட்க சட்டப் போராட்டம் நடத்தி தமிழக அரசு விவசாயிகளின் நலன்களை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கர்நாடகாவின் 2021 ஆம் ஆண்டு முதல்வர் பசவராஜ் பொம்மை மேகதாது அணை கட்டுவதற்காக பட்ஜெட்டில் ஒன்பதாயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளார் இதனையே காங்கிரசும் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது இந்த பிரச்சனைகள் தமிழக அரசு காவிரி மேலாண்மை ஆணையம் மூலம் கவனம் செலுத்தி உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் விவசாயிகளுக்கு பயன்படக்கூடிய அதிகாரம் அளிக்கக்கூடிய குடிமராமத்து பணிகள் திட்டம் நிறுத்தப்பட்டு கலெக்டர் மூலம் வந்தால் மண் எடுக்க அனுமதி வழங்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் மூலம் விவசாயிகளே டிராக்டர் ஒன்றுக்கு ரூபாய் 500 கொடுத்து வண்டல் மண் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது நில உரிமைச் சட்டம் 2023 நிறுத்தி வைக்கப்பட வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.