செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராய சாவு 8 ஆக உயர்வு
1 min read
In Chengalpattu district, the death toll rose to 8
16.5.2023
செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராய சாவு எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது
கள்ளச்சாராயம்
செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பெருங்கருணை பேரம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கள்ளச்சாராயம் அருந்திய சின்னத்தம்பி (34) வசந்தா மற்றும் பெருங்கரணை கிராமத்தைச் சார்ந்த மாரியப்பன், செய்யூர் வட்டம், சித்தாமூர் குறுவட்டம், பேரம்பாக்கம் கிராமத்தில் உள்ள ஏரி பகுதியில் வசித்து வந்த சார்ந்த பென்னியப்பன் (65) மற்றும் சந்திரா (55) ஆகிய 5 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களுக்கு அரசு சார்பில் தலா 10 லட்சம் வழங்கப்பட்டு வருகிறது
இந்த நிலையில் செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சங்கர் (40), ஜம்பு (60) மற்றும் முத்து(64) ஆகிய மூன்று பேர் நேற்று உயிரிழந்தனர் இதனால் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.