June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

கீழப்பாவூர் பேரூராட்சியில் உயர் கோபுர மின் விளக்கு திறப்பு விழா

1 min read

Inauguration ceremony of high tower electric light in Geezappavur municipality

20.5.2023
தென்காசி மாவட்டம்,கீழப்பாவூர் பேரூராட்சியில் ரூபாய் 10 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட உயர்கோபுர மின் விளக்கினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஞானதிரவியம் எம்.பி. இயக்கி வைத்தார்.

பாவூர்சத்திரம் காமராசர் தினசரி காய்கனி சந்தை அருகில் கீழப்பாவூர் பேரூராட்சிக்குள்பட்ட பகுதியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட உயர்கோபுர மின் விளக்கு திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு கீழப்பாவூர் பேரூராட்சி மன்ற தலைவர் பி.எம்.எஸ்.ராஜன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் கி.ராஜசேகர் முன்னிலை வகித்தார்.
கீழப்பாவூர் பேரூராட்சி மன்ற செயல் அலுவலர் ஜா.மாணிக்கராஜ் அனைவரையும் வரவேற்றுபேசினார்.

திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர் சா.ஞானதிரவியம் பங்கேற்று, உயர்கோபுர மின் விளக்கினை இயக்கி வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன், பாவூர்சத்திரம் காய்கனி சந்தை தலைவர் ஆர்.கே.காளிதாசன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் கீழப்பாவூர் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள்
வி.ராதா விநாயகப் பெருமாள் , செ.கோடீஸ்வரன் , மு.மாலதி முருகேசன் , கு.ஜெயசித்ரா குத்தாலிங்கம் , மு.கனகபொன்சேகா முருகன் , க.இசக்கிராஜ் , சி.அன்பழகு சின்னராஜா , ஜா.ஜேஸ்மின் யோவான் , ரா.விஜி ராஜன் , மா . இசக்கிமுத்து , சு.பவானிஇலக்குமண தங்கம் , தா.தேவஅன்பு , முத்துச்செல்வி ஜெகதீசன் த.வெண்ணிலா தங்கச்சாமி , ம.சாமுவேல்துரைராஜ் , சீ.பொன்செல்வன் மற்றும் திமுக, காங்கிரஸ் நிர்வாகிகள், காய்கனி சந்தை, வணிகர் சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் கீழப்பாவூர் பேரூராட்சியின் செயல் அலுவலர் ஜா.மாணிக்கராஜ் அனைவருக்கும் நன்றி கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *