தென்காசியில் அமைச்சர்கள் எ.வ.வேலு, கேகேஎஸ்எஸ்ஆர் பங்கேற்ற சாலைபாதுகாப்பு ஆய்வுக் கூட்டம்
1 min readMinisters AV Velu, KKSSR participated in road safety review meeting in Tenkasi
24.5.2023
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நேற்று சாலைபாதுகாப்பு குறித்து ஆய்வுக்கூட்டம் பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றம் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் துரை.இரவிச்சந்திரன் வரவேற்புரை ஆற்றினார். நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப்யாதவ் சிறப்புரையாற்றினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எ.த.சாம்சன் சாலைபாதுகாப்பு குறித்து கருத்துரை ஆற்றினார். தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம்.குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் தென்காசி எஸ். பழனி நாடார், சங்கரன்கோவில் வழக்கறிஞர் ராஜா, வாசுதேவநல்லூர் டாக்டர் தி.சதன் திருமலைக்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இந்த ஆய்வுக்கூட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் லோண்மை துறை அமைச்சர், கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் கூறியதாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் சாலை பாதுகாப்பின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு சாலை பாதுகாப்பிற்காக அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்;. சாலை சரியாக இருந்தாலும் பாதுகாப்பு விதி முறைகளை நாம் சரியாக கடைப்பிடிக்க வேண்டும். தென்காசி, சங்கரன்கோவில் பகுதிகளில் குற்றாலா சீசன் மற்றும் திருவிழா காலங்களில் அதிகளவில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது அதனை தவிர்க்க சுற்றுச்சாலை அமைக்கப்பட வேண்டும். சாலைபாதுகாப்பை முக்கிய பணியாக கருதி செயல்பட வேண்டும். சாலைபாதுகாப்பு நமது பொறுப்பு.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வுக்கூட்டத்தில் பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்ததாவது:-
தென்காசி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலமான குற்றாலத்திற்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகைத் தருவதால் சாலைபாதுகாப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. விபத்துக்கள் பல்வேறு காரணங்களால் நடைபெறுகிறது. அதிக வேகம,; கவனக் குறைவு, சாலை ஆக்கிரமிப்பு, அதிக பாரம் சுமந்து செல்லுதல், பாதுகாப்பு உபகரணங்கள் பயன்படுத்தாமை, கைபேசி உபயோகித்தல், தவறான பாதையில் செல்லுதல், சுற்றி திரியும் கால் நடைகள் உள்ளிட்ட காரணங்களால் விபத்து ஏற்படுகிறது. சாலை விபத்துகளை தடுக்க நெடுஞ்சாலைத் துறை, போக்குவரத்துத் துறை, காவல் துறை, சுகாதாரத் துறை, கல்வித் துறை உள்ளிட்ட துறைகள் மூலம் விழிப்புணர்வு ஏற்ப்படுத்தப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தென்காசி; மாவட்டத்தை விபத்தில்லா மாவட்டமாக மாற்றுவதற்கு அரசு துறைகள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், பள்ளி கல்லூரிகள், ஓட்டுநர்கள் மற்றும் பொது மக்கள் ஒருகிணைந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் சாலைபாதுகாப்பு குழு உறுப்பினர்கள். ஓட்டுநர் சங்கத்தினர், ஆசிரியர்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளை சேர்ந்த தன்னார்வலர்கள் தங்களது கருத்துகள் மற்றும் கோரிக்கைகளை தெரிவித்தனர்.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் விபத்தில்லாமல் பணிபுரிந்த சிறந்த ஓட்டுநர்கள், சிறந்த அவசரகால ஊர்தி ஓட்டுநர்கள், சிறந்த அவசரகால ஊர்தி உதவியாளர்கள், சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட கட்டுரை போட்டி, வினாடி வினா போட்டி, பொன் மொழிகள் போட்டி, பாடல் போட்டி, ஓவிய போட்டி ஆகிய போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற பள்ளி மாணவ மாணவியர்களுக்கும் பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பரிசு கேடயங்கள் வழங்கப்பட்டது.
மேலும், நெடுங்சாலை துறை, கட்டுமானம் மற்றம் பராமரிப்பு துறையின் சார்பில் சாலைப்பாதுகாப்பு விழிப்பணர்வு கையேட்டினை தமிழக பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றம் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு வெளியிட்டார்.
இந்த ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கு.பத்மாவதி, கோட்ட பொறியாளர் (கட்டுமான மற்றும் நெடுஞ்சாலைத் துறை) ராஜசேகர், கோட்ட பொறியாளர்(நெ) தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டம் ஜெகன்மேகன், கண்காணிப்பு பொறியாளர் ;(சாலை பாதுகாப்பு அலகு) தனசேகர், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சு.தமிழ்ச்செல்வி , மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் ஆயிரப்பேரி தி. உதயகிருஷ்ணன், தென்காசி நகர்மன்ற தலைவர் ஆர்.சாதிர், தென்காசி ஊராட்சி ஒன்றிய தலைவர் வல்லம் மு.ஷேக்அப்துல்லா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.இளவரசி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ரா.ராமசுப்பிரமணியன்,
திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் இலத்தூர் பூ ஆறுமுகச்சாமி, விகேபுதூர் சேசு ராஜன், திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் செங்கோட்டை எஸ் எம் ரஹீம், சீவநல்லூர் கோ சாமித்துரை, தமிழ்ச்செல்வி, மாவட்ட துணைச் செயலாளர்கள் வழக்கறிஞர் க.கனிமொழி கென்னடி, திமுக ஒன்றிய செயலாளர்கள் தென்காசி வல்லம் எம் திவான் ஒலி,
ஆர்.எம். அழகு சுந்தரம், ஆ. ரவிசங்கர், ஜெயக்குமார், மகேஷ் மாயவன், எம் பி எம் அன்பழகன், செங்கோட்டை நகர திமுக செயலாளர் வழக்கறிஞர் ஆ.வெங்கடேசன், திமுக பேரூர் செயலாளர் இ.சுடலை, குற்றாலம் குட்டி, இலஞ்சி முத்தையா, சுந்தரபாண்டியபுரம் வே.பண்டாரம், சாம்பவர் வடகரை முத்து, பண்பொழி கரிசல் அ.ராஜராஜன, யூனியன்
சேர்மன் ஆலங்குளம் திவ்யா மணிகண்டன், கீழப்பாவூர் காவேரி சீனித்துரை சுப்பம்மாள், செல்லம்மாள், திருமலை செல்வி, பொன்.முத்தையா பாண்டியன், லாலா சங்கரபாண்டியன், மற்றும் துறைச் சார்ந்த அலுவலர்கள், தன்னார்வலர்கள், மாணவ, மாணவியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் தலைமை பொறியாளர் (நெ), கட்டுமானம் (ம) பராமரிப்பு ஆர்.சந்திரசேகர்; அனைவருக்கும நன்றி கூறினார்.