கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிக அளவில் கனிமங்கள் ஏற்றி வந்த வாகனங்கள் பறிமுதல்
1 min readVehicles loaded with large quantities of minerals seized in Kanyakumari district
27.5.2023
கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிக அளவில் கனிமங்கள் ஏற்றி வந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அந்த மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அந்த மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-
கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிக பாரம் கனிமங்கள் ஏற்றிச்செல்லும் வாகனங்களை சோதனை
செய்து நடவடிக்கை எடுப்பதற்காக 7 சிறப்புக்குழுக்கள் அமைத்து உத்தரவிடப்பட்டதை தொடர்ந்து,
22.05.2023 திருவத்துவபுரம் என்ற இடத்தில் அதிக பாரம் ஜல்லி ஏற்றிச்சென்ற
வாகனம் தனி வட்டாட்சியர், நிலமெடுப்பு விளவங்கோடு அவர்களால் கைப்பற்றப்பட்டு வாகன
உரிமையாளர் மீது அபராத நடவடிக்கை எடுப்பதற்காக மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து
அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.
24.05.2023 அன்று மாலை மதுரை மண்டல பறக்கும் படையினர் நடத்திய திடீர் சோதனையில்
புத்தேரி கிராமத்தில் அதிக பாரம் கிராவல் ஏற்றிச்சென்ற வாகனம் கைப்பற்றப்பட்டு
வாகன உரிமையாளர் மீது அபராத நடவடிக்கை எடுப்பதற்காக நாகர்கோவில் வட்டார போக்குவரத்து
அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.
25.05.2023 அன்று அதிகாலையில் விளவங்கோடு வட்டம், களியல் கிராம த்தில் விளவங்கோடு
வட்டாட்சியர் திடீர் சோதனை நடத்திய போது உரிய நடைச்சீட்டு இல்லாமல் மண் எடுத்துச் சென்ற
டெம்போ வாகனம் கைப்பற்றபப்பட்டு, வாகன உரிமையாளர் மற்றும் ஓட்டுநர் மீது
குற்றவியல் நடவடிக்கை எடுப்பதற்காக கடையாலுமூடு காவல் நிலையத்தில் ஒப்படைக்கபட்டது.
26.05.2023 முளகுமூடு என்ற இடத்தில் அதிக பாரம் எம்-சாண்ட் ஏற்றிச்சென்ற வாகனம் வட்டாட்சியர், வட்ட வழங்கல் அலுவலர், விளவங்கோடு அவர்களால் கைப்பற்றப்பட்டு
வாகன உரிமையாளர் மீது அபராத நடவடிக்கை எடுப்பதற்காக மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து
அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.
26.05.2023 கோட்டார் என்ற இடத்தில் அதிக பாரம் கிராவல் ஏற்றிச்சென்ற வாகனம் தனி வட்டாட்சியர், கோட்ட ஆய அலுவலர் பத்மனாபபுரம் அவர்களால் கைப்பற்றப்பட்டு வாகன உரிமையாளர் மீது அபராத நடவடிக்கை எடுப்பதற்காக நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆபராத தொகை 50,000 விதிக்கப்பட்டது.
மேலும் 26.05.2023 அன்று வெள்ளமடம் என்ற இடத்தில் அதிக பாரம் ஜல்லி ஏற்றிச்சென்ற வாகனம் தனி வட்டாட்சியர், இரயில்வே நிலமெடுப்பு அலகு 11 நாகர்கோவில் அவர்களால்
கைப்பற்றப்பட்டு வாகன உரிமையாளர் மீது அபராத நடவடிக்கை எடுப்பதற்காக நாகர்கோவில் வட்டார
போக்குவரத்து அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுபோன்று தொடர்ந்து அதிக பாரம் ஏற்றும் கனரக
வாகனங்கள்மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு
மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.