பண்மொழியில் திமுக சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்
1 min readDMK achievement presentation public meeting in traditional language
20.5.2023
தென்காசி தெற்கு மாவட்டம் பண்பொழியில் திமுக அரசின் ஈராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
பொதுக்கூட்டம்
தென்காசி மேற்கு ஒன்றியம் பன்மொழி பேரூராட்சி பகுதியில் திமுக இளைஞரணி சார்பில் நடைபெற்ற ஈடில்லா ஈராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தென்காசி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் வலலம் எம்.திவான் ஒலி தலைமை தாங்கினார். பண்பொழி திமுக நிர்வாகிகள் காளிமுத்து, முதலியான்கான், மணிகண்டன், ராஜீயாத் பேகம், கோவிந்தன், மங்கள விநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பண்பொழி திமுக பேரூர் கழகச் செயலாளரும் பண்பொழி பேரூராட்சி மன்றத்தலைவருமான கரிசல்
அ.இராஜராஜன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார் திமுக நிர்வாகி சேகுகண்ணு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் இந்த கூட்டத்தில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன், திமுக தலைமை கழகப் பேச்சாளர்கள் உடன்குடி தனபால், அச்சன்புதூர் மாரித்துரை ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொருளாளர் எம் ஏ எம் ஷெரிப், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் இலத்தூர் பூ ஆறுமுகச்சாமி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஹக்கீம், குற்றாலம் பேரூராட்சி மன்ற உறுப்பினர் கிருஷ்ணராஜா, மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் செல்லத்துரை, வடகரை ராமர், ஒன்றிய பிரதிநிதிகள் சங்கர், மாரியப்பன், இஸ்மாயில் முஹம்மது உசேன் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆறுமுகம், முகமது இஸ்மாயில், அன்வர் ஜகான், பூமாரி திமுக வார்டு செயலாளர்கள் ராமர், மாடசாமி, முத்துராமலிங்கம், அருணகிரி, கஜேந்திரன், செண்பகராமன், சின்ன கருப்பசாமி, மஜீத், முகமது அனிபா,அசன்கனி மூர்த்தி, முத்துக்கிருஷ்ணன், ஆறுமுகசாமி, காளிராஜ், அப்துல் காதர், உட்பட பலர் கலந்து கொண்டனர் முடிவில் பண்பொழி பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர் இசக்கி அனைவருக்கும் நன்றி கூறினார்.