பனை தொழிலாளர்களுக்கு நிவாரணத்தொகை வழங்க கோரிக்கை
1 min readDemand for compensation to palm workers
29.5.2023
தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பின் தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார் பனைத் தொழிலாளர்களுக்கு தொழில் இல்லாத ஆறு மாத காலத்திற்கு மீனவர்களுக்கு மீன்பிடி தடை கால நிவாரணம் வழங்குவதைப் போல பனைத் தொழிலாளர்களுக்கும் நிவாரண தொகை வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக வேளாண்மை துறை அமைச்சர்
எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.
அந்த கோரிக்கை மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
நிவாரணம்
தமிழக அரசு மீனவர்களுக்கு மீன்பிடி தடை காலங்களில் நிவாரணமாக 5 ஆயிரம் ரூபாய் மீனவர்களுக்கு கொடுக்கிறது இதே போல பனை தொழிலாளர் களுக்கும் ஆண்டு தோறும் 6 மாத காலத்திற்கு நிவாரணத் தொகையாக மாதம் 5 ஆயிரம் வழங்க வேண்டும் பனைத் தொழில் என்பது ஆண்டுக்கு 6 மாத காலம் மட்டுமே நடைபெறும் மீதமுள்ள ஆறு மாத காலம் வேறு தொழில் இன்றி மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார்கள் பனை தொழிலாளர்கள் எனவே மீனவர்களுக்கு 61 நாட்கள் மட்டுமே மீன்பிடி தடைகாலம் இருந்து வருகிறது ஆனால் பனை தொழிலாளர்களுக்கு 180 நாட்களுக்கு மேல் தொழில் செய்ய முடியாத ஒரு சூழ்நிலை இருக்கிறது ஏற்கனவே பனைத் தொழில் நலிந்து கொண்டு வருகிறது அழிந்து கொண்டு வருகிறது
தமிழக அரசு சிறு சிறு விவசாயம் முதல் சிறு கைதொழில் வரைக்கும் இயந்திரங்களை கண்டுபிடித்து இயந்திரங்கள் மூலமாக வேளாண்மை உற்பத்திகளும் உணவுப் பொருள் உற்பத்திகளும் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அனைத்து பொருட்கள் தயாரிப்பதற்கு இயந்திரங்கள் கண்டுபிடித்து அந்த அந்த தொழிலை விரிவுபடுத்தி இருக்கிறது ஆனால் பனைத் தொழிலுக்கு மட்டுமே இன்னும் எந்த ஒரு இயந்திரத்தையும் அரசு கண்டு பிடிக்க வில்லை
பனை தொழிலை விரிவு படுத்த அரசு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை தமிழக அரசு பனை வளர்ப்பதற்கும் பனையைப் பற்றி ஆராய்ச்சி செய்வதற்கும் ஒதுக்கீடு செய்த கோடிக்கணக்கான ரூபாயை பனைத் தொழிலை மேம்படுத்துவதற்கும் இயந்திரங்கள் மூலமாக பனையில் இருந்து கிடைக்கக்கூடிய பொருட்களை உணவுப் பொருட்களாக தயாரிப்பதற்கும் இயந்திரங்கள் கண்டுபிடிக்க பணம் ஒதுக்கீடு செய்தால் பனைத் தொழிலாளர்கள் வாழ்வில் ஒளி பிறக்கும் பனைத் தொழிலாளர்கள் வறுமையில் இருந்து முன்னேறுவார்கள் பனைத் தொழில் ஆராய்ச்சிக்கு ஒதுக்கிய பணத்தாலோ பனைத் தொழில் ஆராய்ச்சியினாலோ பனைத் தொழில் ஒருபோதும் வளம் பெறுவதில்லை
இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஆறு மாத காலம் மட்டுமே தன் தொழிலை செய்து மீதி ஆறு மாத காலம் வறுமையில் வாடிக் கொண்டிருக்கின்ற அனைத்து பனை தொழிலாளர்களுக்கும் தமிழக அரசு மீனவர்களுக்கு வழங்கப்படுவதை போல மாதத்திற்கு ஐந்தாயிரம் ரூபாய் வீதம் நிவாரணமாக வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வரை தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பின் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளார்.