June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

சுரண்டையில் நர்சிடம் தங்க சங்கிலி பறித்தவருக்கு வலை

1 min read

The net for the one who snatched the gold chain from the nurse in the exploitation

  1. 6.2023

தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே உள்ள ஆலடிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராமநாதன்இவரது மனைவி புஷ்பா (வயது 55). இவர் சுரண்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். இரவு 7 மணி அளவில் சுரண்டை பஸ் நிலையம் அருகில் உள்ள பழைய மார்க்கெட்டுக்கு காய்கறி வாங்க நடந்து வந்து கொண்டிருந்தார்.

அப்போது புஷ்பாவை பின் தொடர்ந்து வந்த மர்மநபர் ஒருவர் திடீரென்று புஷ்பா கழுத்தில் கிடந்த 55 கிராம் தங்க சங்கிலியை பறித்து விட்டு தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து அவர் சுரண்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி செயின் பறித்த நபரை வலை வீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *