June 10, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி தெற்கு மாவட்ட திமுக வில் 1,54,423 புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு-மாவட்ட செயலாருக்கு பாராட்டு

1 min read

1,54,423 new members recruited in Tenkasi South District DMK- district secretary praised

3.6.2023
தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் தென்காசி, ஆலங்குளம், கடையநல்லூர், உள்ளிட்ட மூன்று சட்டமன்ற தொகுதிகளிலும் புதிதாக ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 423 புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ள
நிலையில் திமுக அமைப்பு இணைச்செயலாளர் அன்பகம்கலை தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதனுக்கு வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்

தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தலா 50, ஆயிரம் புதிய உறுப்பினர்கள் சேர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியதின் பேரில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் தீவிர முயற்சியால் தென்காசி, ஆலங்குளம், கடையநல்லூர் உள்ளிட்ட மூன்று சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 423 புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தென்காசி தெற்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றிய, நகர பேரூர் , கிளை மற்றும் வார்டு கழக நிர்வாகிகள் மாவட்ட கழகத்தால் நியமிக்கப்பட்ட பார்வை யாளர்கள், அவர்களுக்கு கீழே இருந்து கழகத்தை காத்து வருகிற கிளைக் கழகச் செயலாளர்கள் வார்டு கழகச் செயலாளர்கள் ஆகியோர்களின் கூட்டு முயற்சியால் தென்காசி தெற்கு மாவட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட ஒன்றரை லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது.

அதன்படி ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் 53 ஆயிரத்து 154 உறுப்பினர்களும், தென்காசி சட்டமன்ற தொகுதியில் 50 ஆயிரத்து 641 உறுப்பினர்களும்,
கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியில் 50 ஆயிரத்து 628 உறுப்பினர்களும் புதிதாக சேர்க்கப்பட்டு தலைமைக் கழகத்தில் உறுப்பினர் படிவங்கள் மற்றும் ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டு தலைமைக் கழகத்தால் வழங்கப்பட்ட ரசீதுகளும் பெறப்பட்டுள்ளது .

இந்நிலையில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன்
தென்காசி சட்டமன்ற தொகுதி பார்வையாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின்,
கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் மாநில தொண்டர் அணி துணைச் செயலாளர் ஆவின்ஆறுமுகம் ஆகியோர் திமுக கழகத்தால் வழங்கப்பட்ட ரசீதை கழக அமைப்பு இணைச்செயலாளர் அன்பகம்கலையிடம் வழங்கினர்.
அப்போது தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன்
மற்றும் நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் திமுக மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் அவருடன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
ஆஸ்டின், ஆவின் ஆறுமுகம், கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் க. சீனித்துரை மற்றும் பாப்பாக்குடி ஒன்றிய பார்வையாளர் கடையம் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *