இந்திய மக்கள் பா.ஜனதாவை தோற்கடிக்கப் போகிறார்கள்- ராகுல் காந்தி பேச்சு
1 min read
People of India are going to defeat BJP-Rahul Gandhi speech
4.7.2023
தெலுங்கானா மாநில தேர்தலில் பா.ஜனதா வுக்கு மிகப்பெரிய தோல்வியை அளிப்போம் நான்கு மாநில தேர்தல் முடிவு பாராளுமன்ற தேர்தலிலும் பிரதிபலிக்கும் என்று ராகுல்காந்தி கூறினார்.
ராகுல்காந்தி
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அமெரிக்கா சென்றுள்ளார். அங்கிருந்து பா.ஜனதாவையும், மோடி தலைமையிலான மத்திய அரசையும் விமர்சனம் செய்து வருகிறார். தற்போது அவர் நியூயார்க்கில் உள்ளார். அங்கு ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
எங்களால் பா.ஜனதாவை தோற்கடிக்க முடியும் என்பதை கர்நாடகா மாநில தேர்தலில் காண்பித்துவிட்டோம். நாங்கள் அவர்களை தோற்கடிக்கவில்லை. அவர்களை நீக்கிவிட்டோம். கர்நாடகாவில் படுதோல்வியை கொடுத்துவிட்டோம். பணம், மீடியா, ஏஜென்சி பலத்தால் எங்களை வீழ்த்த முயற்சித்தார்கள். ஆனால், நாங்கள் அவர்களை துவம்சம் செய்து விட்டோம். அடுத்தபடியாக தெலுங்கானாவில் அவர்கள் காணாமல் ஆக்கப்போகிறோம் என்பதை உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன்.
இந்தத் தேர்தலுக்குப் பிறகு பா.ஜனதா தெலுங்கானாவில் தலைதூக்குவது மிகக் கடினம் ஆகிவிடும். கர்நாடகாகவில் என்ன செய்தோமோ, அதேபோன்று ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் தேர்தலிலும் செய்வோம். காங்கிரஸ் கட்சி மட்டும் தோற்கடிக்கப் போவதில்லை. இந்திய மக்களாகிய மத்திய பிரதேச மக்கள், தெலுங்கானா மக்கள், ராஜஸ்தான் மக்கள், சத்தீஸ்கர் மக்கள் தோற்கடிக்கப் போகிறார்கள். சமூத்தில் வெறுப்பை பரப்பும் பா.ஜனதாவால் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது என்பதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். அடுத்த நான்கு மாநில தேர்தலில் என்ன நடக்கப் போகிறதோ, அதுதான் 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் அரங்கேறும்.
எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உள்ளன. நாங்கள் இணைந்து பாடுபடுவோம். ஒரு பக்கம் வெறுப்பு சித்தாந்தம் கொண்ட பா.ஜனதா. மறுபக்கம் காங்கிரஸ் கட்சியின் விரும்பத்தக்க சித்தாத்தம் உள்ளது.
இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.