இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 124 பேராக குறைந்தது
1 min read
Daily corona cases in India reduced to 124
6.6.2023
இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. ஒரு நாளில் 124 பேராக குறைந்தது.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. நேற்று பாதிப்பு 174 ஆக இருந்தது. இன்று 124 ஆக குறைந்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 49 லட்சத்து 91 ஆயிரத்து 880 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 314 பேர் நலம் பெற்றுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 44 லட்சத்து 56 ஆயிரத்து 995 ஆக அதிகரித்துள்ளது. தற்போது ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 3,001 ஆக சரிந்துள்ளது. இது நேற்றைய விட 192 குறைவு ஆகும். தொற்று பாதிப்பால் நேற்று ராஜஸ்தானில் ஒருவர் இறந்துள்ளார். கேரளாவில் விடுபட்ட ஒரு மரணம் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. இதுவரை தொற்றுக்கு பலியானோரின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 884 ஆக உயர்ந்துள்ளது.