வெங்காடம்பட்டியில் சுற்றுச்சூழல் தின விழா
1 min read
Environment Day Festival at Venkadampatti
6.6.20223
சுற்றுச்சூழல் தினத்தை வெங்காடம்பட்டியில் சற்றே வித்தியாசமாக மரக்கன்றுகள் நடவு, தோல் பாவை கூத்து, வடமாநில குழந்தைகள் பங்கேற்பு, சூழல் உறுதிமொழி என கொண்டாடப்பட்டது.
சுற்றச்சூழல்
தென்காசி மாவட்டம் வெங்காடம்பட்டி டிரஸ்ட் – இந்தியா பள்ளியில் சுற்றுச்சூழல் தினம் விமர்சையாகவும் வித்தியாசமாகவும் நடைபெற்றது. பள்ளி கோடை விடுமுறை என்பதால் பள்ளிக் குழந்தைகளை அழைக்காமல் புலம் பெயர்ந்த வட இந்திய குழந்தைகள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளைக் கொண்டு அனுசரிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு டிரஸ்ட் குழந்தைகள் இல்லம் பூ.திருமாறன் தலைமை தாங்கினார். டிரஸ்ட் – இந்தியா தலைமையாசிரியை சாந்தி, சூழல் ஆராய்ச்சியாளர் சாமிதோப்பு இரா. பிரவீன் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியை சுற்றுச்சூழல் விஞ்ஞானி டாக்டர் விஜயலட்சுமி துவக்கி வைத்து பேசினார். பிரபல தோல்பாவைக் கூத்து கலைஞர்கள் ஆரல்வாய்மொழி லட்சுமணராவ், நாகராணி, முத்துவேலன் குழந்தைகளுக்கு பாரம்பரிய பழங்கலையான தோல்பாவைக் கூத்து மூலம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
சமீபத்தில் ஒடிசாவில் உலகையே திடுக்கிடச் செய்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் நினைவாக மேற்கு வங்கத்து குழந்தைகள் மரக்கன்று நடவு செய்தனர். ரயில் விபத்தில் மாண்டவர்கள் நினைவாக 280 மரக்கன்றுகள் நட்டு முடிக்க இலுப்பை மரக்கன்றுகளை சமூக நல ஆர்வலர் திருமாறன் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுரேஷ், மாரிச்செல்வம், கணேசன், சுகுமார், பிரவீன், துரை, சந்தோஷ், பால் மதி செய்திருந்தனர். முன்னொரு காலத்தில் மிகப் பிரபலமாக கிராமப்புறங்களில் பொழுதுபோக்கு அம்சமாக இருந்த பாவைக் கூத்து என்று அழைக்கப்பட்ட தோல் குத்து நாடகம் பற்றி இக்கால குழந்தைகள் அதிசயப்பட்டனர். மருவி வரும் கலைகளையும் மாண்டு வரும் மர இனங்களையும் காப்பது மக்களின் பெருங்கடமை என்ற உறுதிமொழி எடுக்கப்பட்டது. நிறைவில் நன்னன் அனைவருக்கும் நன்றி கூறினார். முன்னதாக தோல்பாவைக் கூத்து கலைஞர்களுக்கு கரிசனக்காரர் விருதுகளை விஜயலட்சுமி, சாந்தி, திருமாறன் வழங்கினர்.