கடையம் அருகே பெண்ணிடம் செயினை பறித்த 2 பேர் கைது
1 min read
2 people were arrested for snatching a chain from a woman near the shop
6.6.2023
தென்காசி மாவட்டம், கடையம் அருகே கணவனுடன் பைக்கில் சென்ற பெண்ணிடம் தாலி செயினை பறித்துச் சென்ற தூத்துக்குடி பகுதியை சேர்ந்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
செயின் பறிப்பு
கடையம் அருகே உள்ள புலவனூர் பொன்மலைநகரைச் சேர்ந்தவர் ராமர். இவரது மனைவி சங்கீதா. இவர்கள் 2 பேரும் கடந்த 27-ந் தேதி இரவில் மோட்டார் சைக்கிளில் புலவனூரில் இருந்து மாதாபுரத்திற்கு சென்று கொண்டு இருந்தனர்.
அவர்களின் பின்னால் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள், சங்கீதா கழுத்தில் கிடந்த 55 கிராம் எடையுள்ள தாலிச் செயினை பறித்துச் சென்றுவிட்டனர்.
இதுகுறித்து கடையம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சப்-இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ் ணன் வழக்குப்பதிவு செய்தனர்.
தகவலறிந்த தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன், மற்றும் ஆலங்குளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயபால் பர்னபாஸ் ஆகியோர்களின் உத்தரவின்படி, கடையம் காவல் ஆய்வாளர் விஜயகுமார், உதவி ஆய்வாளர்கள் நவநீதகிருஷ் ணன், வேல்முருகன், காவலர் அயன்ராஜ் மற்றும் ஆலங்குளம் உட்கோட்ட குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் சேஷகிரி, தலைமை காவலர்கள் பாலமுருகன், மோகன்ராஜ், குமரேச சீனிவாசன், மு.நி.காவலர்கள் லிங்கராஜா, மகேஷ் மற்றும் சைபர் க்ரைம் மனோஜ், ஜேசு ஆகியோர்களின் தொடர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
தீவிர விசாரணைக்குப்பின் தூத்துக்குடி மாவட்டம் லெவஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த வேலுச்சாமி மகன் மாரி செல்வம் (வயது 22), சத்திய வாசகம் மகன் சிவா (22) ஆகியோர் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 55 கிராம் எடையுள்ள தாலிச் செயின் மற்றும் இந்த திருட்டுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
அதனைத் தொடர்ந்து குற்றவாளிகள் மாரிச்செல்வம் சிவா ஆகிய இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினார்கள்.நீதிபதி இருவரையும் 15 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார் அதன்படி இரண்டு நபர்களும் சிறையில் அடைக்கப்பட்டன.