April 26, 2024

Seithi Saral

Tamil News Channel

சிவகிரி பேரூராட்சியில் ரூ6.98 கோடியில் பாலம், வாறுகால் அமைக்க பூமி பூஜை

1 min read

Bhoomi Pooja to construct bridge and footbridge at Rs 6.98 crore in Sivagiri municipality

10.6.2023
தென்காசி மாவட்டம், சிவகிரி பேரூராட்சி பகுதியில் உள்ள கலிங்கல் பாலம்
நபார்டு திட்டத்தில் ரூ4 கோடி, மூலதன மானியத்திட்டத்தில் ரூ2.98 கோடி ஆக மொத்தம் ரூ.மொத்தம் ரூ.6.98 கோடி செலவில் வாறுகால் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இப்பணிக்கான பூமிபூஜை நேற்று நடைபெற்றது .

தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் துரை.இரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மண்டல பேரூராட்சி உதவி இயக்குநர் (பொ) திருச்செல்வம் , சிவகிரி பேரூராட்சி தலைவர் கோமதி சங்கரி, துணை தலைவர் லட்சுமிராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தென்காசி எம்பி தனுஷ் எம் குமார், தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் எம்எல்ஏ ராஜா, வாசுதேவநல்லூர் எம்எல்ஏ டாக்டர் சதன் திருமலைக் குமார், வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மன் பொன் முத்தையாபாண்டியன், தலைமை செயற்குழு உறுப்பினர் சவுக்கை யூ.எஸ்.டி. சீனிவாசன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பூமி பூஜையை தொடங்கி வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் சிவகிரி தாசில்தார் ஆனந்த், துணை தாசில்தார்கள் சுடலை மணி, வெங்கட சேகர், திமுக மாநில மருத்துவ அணி துணை அமைப்பாளர் டாக்டர் செண்பகம் விநாயகம், யூனியன் துணை சேர்மன் சந்திர மோகன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் வீரமணி, நகராட்சி செயலாளர்கள் பிரகாஷ், அந்தோணி ச்சாமி, ஒன்றிய செயலாளர் பெரியதுரை, கூட்டுறவு சங்கம் தலைவர் மருதுபாண்டியன், ஒன்றிய விவசாய தொழிலாளர் அணி கார்த்திக், மகளிர் அணி துணை அமைப்பாளர் கிருஷ்ண லீலா, மாவட்ட மாணவரணி சுந்தர் வடிவேலு, மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் மருதப்பன், மதிமுக ஒன்றிய செயலாளர் கிருஷ்ண குமார், ஒன்றிய பொருள்ளார்மாரிச்சாமி, வைரவன், பொறியாளர் பாண்டியராஜ், நியமன குழு உறுப்பினர் விக்னேஷ்,வரி, விதிப்பு மேல்முறையீடு குழு உறுப்பினர் செந்தில்வேல், ராஜலட்சுமி, ரத்தினராஜ், இருளப்பன்,

பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர் கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பேரூராட்சி நிர்வாக அலுவலர் வெங்கடகோபு அனைவருக்கும் நன்றி கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.