June 22, 2026

Seithi Saral

Tamil News Channel

கடையத்தில் நீர்ப்பாசன மடையை சீரமைக்க கவுன்சிலர் மாரிக்குமார் கோரிக்கை

1 min read

Councilor Marikumar’s request to repair the irrigation tank at the shop

19.6.2023
கடையத்தில் நீர்ப்பாசன மடையை சீரமைக்க பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலர் கோரிக்கை விடுத்துள்ளார்.

குட்டிக்குளம்

கடையத்திற்கு மேற்கே குத்தாலம்பிள்ளை குளம் அருகே குட்டி குளம் உள்ளது. இதன் மூலம் சுமார் 500 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இதில் உள்ள வாய்க்கால் பாசன மடை சேதம் அடைந்து சுமார் 10 வருடங்கள் ஆகிறது. இதனால் இந்த மடைக்கு அருகில் உள்ள நிலங்களில் உள்ள பயிர்கள் அழுகியும், தூரத்தில் உள்ள பயிர்கள் சரிவர நீர்ப்பாசனம் இல்லாததால் கருகியும் சேதமடைந்து வருகிறது.
எனவே போர்க்கால அடிப்படையில் குட்டி குளம் மடையை சீரமைத்து தர வேண்டுமென ஒன்றிய கவுன்சிலர் மாரி குமார் பொதுமக்கள் சார்பாக, மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரனிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *