வெள்ளை மாளிகையில் 19 குண்டுகள் முழங்க மோடிக்கு வரவேற்பு
1 min read
19 bombs ring in the White House to welcome Modi
22.6.2023
அமெரிக்கா சென்ற பிரதமர் மோடிக்கு வெள்ளை மாளிகையில் 19 குண்டுகள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்போது வந்தேமாதரம் பாடல் ஒலிக்கப்பட்டது.
அமெரிக்காவில் மோடி
அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி அங்கு, 25ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் மோடி பங்கேற்கிறார். கடந்த 21-ல் ஐ.நா. தலைமையகத்தில் நடந்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பங்கேற்றார். இன்றைய நிகழ்வில் அமெரிக்காவின் நாசா, இந்தியாவின் இஸ்ரோ இடையே இணைந்து செயல்பட ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து வெள்ளை மாளிகை வந்த பிரதமர் மோடிக்கு 19 குண்டுகள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. மோடியை, அதிபர் ஜோ பைடன், மனைவி ஜில் பைடன் ஆகியோர் வரவேற்றனர். அப்போது வந்தே மாதரம் பாடல் ஒலிக்கப்பட்டது.
பின்னர் மோடியை வரவேற்று ஜோ பைடன் பேசியதாவது:-
மீண்டும் வெள்ளை மாளிகை வந்துள்ள பிரதமர் மோடி வந்திருப்பது எங்களுக்கு பெருமிதம். அமெரிக்க இந்தியா உறவு மேலும் வலுவடைந்து உள்ளது. இந்த 21-ம் நூற்றாண்டில் இந்திய- அமெரிக்க இடையோன நட்புறவு உலகளாவிய நன்மைக்கானது. இந்தியாவின் ஒத்துழைப்புடன் இந்தோ -பசிபிக் பிராந்திற்காகவும், உலக நன்மைக்காவும் ‘குவாத்’ அமைப்பை பலப்படுத்தியுள்ளோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது:-
அமெரிக்க அரசு எனக்கு அளித்த வரவேற்பு 140 கோடி இந்தியர்களுக்கான கவுரமாகும். அதற்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். இந்தியர்களுக்காக வெள்ளை மாளிகையின் கதவுகள் திறக்கப்பட்டு இருக்கின்றன. இந்தியாவின் வளர்ச்சியில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் பெரும் பங்கு வகிக்கின்றனர் .அமெரிக்கா இந்தியாவின் உறவின் உண்மையான பலம் அமெரிக்கா வாழ் இந்தியர்கள் தான். பிரதமரான பின்னர் பல முறை வெள்ளை மாளிகை வந்த பின்னரும் தற்போது வெள்ளை மாளிகை கதவுகள் பெரிய அளவில் திறந்து உ்ளளன. அமெரிக்க வாழ் இந்தியர்கள் தங்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பால் தாய் நாட்டிற்கு பெருமை சேர்க்கின்றனர். உலகம் முழுவதும் வலிமையை மேம்படுத்தும் வகையில் அமெரிக்கா -இந்தியா நட்புறவு இருக்கும். அமைதி ,ஸ்திரத்தன்மை உள்ளிட்டவற்றை நிலைநாட்ட இருநாடுகளும் இணைந்து செயல்படுவது என உறுதி பூண்டுள்ளோம். கொரோனாவுக்கு பிந்தைய காலகட்டத்தில் உலகம் புதிய வடிவத்தை பெற்றுள்ளது. ஜோ பைடனுடான பேச்சுவார்த்தை சாதகமாக இருக்கும் என்று நம்புகிறேன்.
இவவாறு பிரதமர் பேசினார்.