செந்தில் பாலாஜி வழக்கு 11-ந்தேதி ஒத்திவைப்பு-ஐகோர்ட்டு உத்தரவு
1 min read
Senthil Balaji case 11-date adjournment- Court order
7.7.2023
செந்தில் பாலாஜி வழக்கை வரும் 11-ந்தேதிக்கு ஒத்திவைத்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி வழக்கு மீதான விசாரணையில் 2 நீதிபதிகள் கொண்ட அமர்வில் மாறுபட்ட தீர்ப்புகள் வழங்கப்பட்ட நிலையில், நேற்று 3-வது நீதிபதி விசாரணை தொடங்கியுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற காலத்தை காவல் காலமாக கருத முடியாது என அமலாக்கத்துறை கோரியிருந்தது.
இந்த நிலையில் தற்போது 3-வது நீதிபதி கார்த்திகேயன் முன்னிலையில் விசாரணை தொடங்கியது. இந்த விசாரணையின் போது அமலாக்கத்துறை தரப்பிலும், செந்தில் பாலாஜியின் மனைவி மேகலாவின் தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, செந்தில் பாலாஜி வழக்கை வரும் 11-ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.