June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

ரேஷன் கடை ஊழியரிடம் ரூ. 1000 லஞ்சம்ராம்கோ ஓய்வு மேலாளருக்கு 2 ஆண்டு சிறை

1 min read

Rs. 1000 bribe 2 years imprisonment for Ramco Retirement manager

22.87.2023
ஆர்.எஸ்.மங்கலம் அருகே ரேஷன் கடை ஊழியரிடம் ரூ.1000 லஞ்சம் வாங்கிய ராம்கோ ஓய்வு மேலாளாருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

லஞ்சம்

ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி திருவாடானை ராம்கோ பண்டக சாலை கட்டுப்பாட்டின் கீழ 12 ரேஷன் கடைகள், ஒரு சில்லரை விற்பனை கடை உள்ளன. இதில் ஆர்.எஸ்.மங்கலம் அருகே பாண்டுகுடி ராம்கோ ரேஷன் கடை உதவி விற்பனையாளர் சுந்தரராஜ் என்பவரிடம், திருவாடானை ராம்கோ பண்டக சாலை மேலாளர் ஜெயச்சந்திரன் மாதம் ரூ.1000 கையூட்டு பெற்று வந்தார்.
கடந்த 2004 ஆம் ஆண்டு கையூட்டு பெற்றபோது ஜெயச்சந்திரனை ராமநாதபுரம் லஞ்சம் ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக பிடித்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை
ராமநாதபுரம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்தது.
விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் ஓய்வு மேலாளர் ஜெயச்சந்திரனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை, ரூ. 2,000 அபராதம் விதித்து
தலைமை குற்றவியல் நடுவர் கவிதா தீர்ப்பளித்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *