June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்த டாக்டர்களுக்கு தென்காசி கலெக்டர் பாராட்டு

1 min read

Tenkasi Collector praises doctors who performed cancer surgery

22.7.2023
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூரில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமில் மார்பகப் புற்றுநோய் கண்டறியப்பட்ட பெண்களுக்கு வெற்றி கரமாக அறுவை சிகிச்சை செய்த தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர்களுக்கு தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் துரை. இரவிச்சந்திரன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் கிராமத்தில் தமிழக அரசு சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது,

அந்த மருத்துவமுகாமில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் பங்கு பெற்று சிகிச்சை பெற்றனர், அதில் 100 கும் மேற்பட்ட தாய்மார்களுக்கு, தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை அறுவை சிகிச்சை மருத்துவர்களால் மார்பக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது, .
அந்த முகாமில் இருபதுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு மார்பகத்தில் பிரச்சனை இருப்பதை அறிந்து, அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு மேல் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அவர்கள் அனைவருக்கும் மார்பக தசை பரிசோதனை போன்ற அனைத்து பரிசோதனை களும் மேற்கொள்ளப்பட்டது, .
பரிசோதனை மேற்கொள்ளப்பட்டவர்களில் நான்கு பெண்களுக்கு மார்பக புற்றுநோய் இருப்பது உறுதிசெய்யப்பட்டது,

அதனைத் தொடர்ந்து முதலமைச்சரின் விரிவான மருதுகாப்பிடு திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை நிபுணர்கள் ஸ்வர்ணலதா, விஜயகுமார், முத்துக்குமார சுவாமி, ஜெரின் இவஞ்செலின், விக்னேஷ் ஷங்கர் ஆகிய மருத்துவக்குழுவினர்களால் மார்பக புற்றுநோய் அகற்றுதல் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது.

தற்போது அவர்கள் நால்வரும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பிட்டு திட்ட வார்டில் நலமாக உள்ளார்கள். இதை பற்றி தென்காசி மாவட்ட இணை இயக்குனர் நலப்பணிகள் மருத்துவர் பிரேமலதா கூறும்போது, இதுபோன்ற உயிர் காக்கும் உயர் அறுவை சிகிச்சைகள், தென்காசி அரசு மாவட்ட மருத்துவமனையில் நடப்பது மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது எனக் கூறி மருத்துவக் குழுவினரை வெகுவாக பாராட்டினார்.

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் இரா.ஜெஸ்லின்,
கலைஞரின் நூறாவது பிறந்த நாளை ஒட்டி நடைபெற்ற மாபெரும் மருத்துவ முகாமில் நான்கு பெண்களுக்கு மார்பக புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டு, அவர்களுக்கு, தென்காசி மருத்துவமனையில் உடனடியாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இது மிகப்பெரிய சாதனை. இதனை நடத்தி காட்டிய மருத்துவக் குழுவினருக்கு பாராட்டுக்கள். மேலும்
தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை யில் அனைத்து வகையான அறுவை சிகிச்சைகள், சிக்கலான அறுவை சிகிச்சைகள் தினந்தோறும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பொதுமக்கள் இந்த வசதியை பயன்படுத்தி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றார்.

அதனைத் தொடர்ந்து தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஏழை எளிய மக்களுக்கு மார்பக புற்றுநோய் அறுவை சிகிச்சை வழங்கிய அறுவை சிகிச்சை மருத்துவர்கள் மருத்துவமனை கண்காணிப்பாளர் இரா.ஜெஸ்லின் ,இணை இயக்குனர் மற்றும் அனைத்து மருத்துவர்கள் அனைவரையும் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் துரை. இரவிச்சந்திரன் அழைத்து பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *