ராகுல் காந்தி 2 நாள் பயணமாக வயநாடு செல்கிறார்
1 min read
Rahul Gandhi is going to Wayanad on a 2-day visit
8.8.2023
ராகுல் காந்தி 2 நாள் பயணமாக வயநாடு செல்கிறார்.
ராகுல்காந்தி
மோடி குறித்த அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து சூரத் கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதை தொடர்ந்து வயநாடு தொகுதி எம்.பி. பதவியில் இருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில் உச்சநீதிமன்ற மேல்முறையீட்டு மனு விசாரணையின்போது, ராகுல் காந்தியின் சிறைத்தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும் 2 ஆண்டு ஜெயில் தண்டனைக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
இதை தொடர்ந்து ராகுல் காந்தியின் எம்.பி. பதவிக்கான தகுதி நீக்கம் ரத்து செய்யப்பட்டது. மீண்டும் எம்.பி. பதவி கிடைத்துள்ளதால் ராகுல் காந்தி 2 நாள் பயணமாக வயநாடு செல்கிறார். வரும் 12, 13-ந்தேதிகளில் வயநாட்டில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்கிறார். லோக்சபா எம்.பி.யாக மீண்டும் பதவியேற்ற பிறகு, ராகுல் காந்தி செல்வது இதுவே முதல் முறையாகும்.