June 10, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசியில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்

1 min read

Welfare assistance during the People’s Reduction Day meeting in Tenkasi

8.8.2023
தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை கலெக்டர் பெற்றுக் கொண்டார்.
நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் மாற்று த்திறனாளிகள் நல துறையில் உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 13 பேருக்கு மடக்கு சக்கர நாற்காலிகள், 5 பேருக்கு காதொலி கருவிகள் உள்பட ரூ. 1 லட்சத்து 50,500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ரவிச்சந்திரன் வழங்கினார்.

மேலும் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக்கோருதல், பட்டாமாறுதல், மாற்றத்தி றனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என 430 மனுக்கள் பெறப்பட்டது. கலந்து கொண்டவர்கள் மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா என்பதை விசாரணை செய்து அதன் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து த்துறை அலுவ லர்களுக்கும் மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார். இதில் டி.ஆர்.ஓ. பத்மா வதி, உதவி கமிஷனர் (கலால்) ராஜமனோகர், மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் நல அலுவலர் சங்கரநாராயணன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயபிரகாஷ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ராமசுப்பிரமணி யன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *