தென்காசி மாவட்ட அரசு மருத்துவ மனையில் உலக தாய்ப்பால் வார விழா
1 min read
World Breastfeeding Week Celebration at Tenkasi District Government Hospital
8.8.2023
தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் வைத்து உலக தாய்ப்பால் வார விழா ஆகஸ்ட் 1 ம் தேதி முதல் 7 ம் தேதி வரை கொண்டாடப் பட்டது.
தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை யில் நடைபெற்ற உலக தாய்ப்பால் வார விழா முதல் நாள் நிகழச்சியை தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் துரை இரவிச்சந்திரன்தொடங்கிவைத்தார்.
அதனைத்தொடர்ந்து 7.8.2023 வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
கடைசி நாள் நிகழ்ச்சி இண இயக்குர் சுகாதார பணிகள் மருத்துவர் பிரேமலதா தலைமையில் நடைபெற்றது. குழந்தைகள் நல மருத்துவர் தென்காசி மீரான் மருத்துவமனை நிறுவனர் டாக்டர் அப்துல அஜீஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார் .
இந்த விழாவில் குழந்தைகள் நல மருத்துவர் உமா கதிரேசன் கவுரக விருந்தினராக கலந்துகொண்டு தாய்பாலின் அவசியத்தை விளக்கமாக எடுத்து உரைத்தார்
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை குழந்தைகள் நல தலைமை மருத்துவர் கீதா கிருஷ்ணன் அவர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்து இருநதார். விழாவில் தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் இரா.ஜெஸ்லின் உறைவிட மருத்துவர் செல்வபாலா, மருத்துவர்கள் ராஜேஷ், புனிதவதி, அன்னபேபி , முஸம்மில் லதா மற்றும் தலைமை செவிலியர்கள் செவிலியர்கள் பயிற்சி செவிலியர்கள் மற்றும் தாய்மார்கள் கலந்து கொண்டார்கள்
ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 7 ஆம் தேதி வரை தென்காசி அரசு மருத்துவமனையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முடிவில் டாக்டர் முஸ்ம்பில் அனைவருக்கும் நன்றி கூறினார்.