June 10, 2026

Seithi Saral

Tamil News Channel

நெல்லையில் வீட்டில் கஞ்சா பதுக்கிய சிறுவன் உள்பட 2 பேர் கைது

1 min read

2 people, including a boy, were arrested for storing ganja in a house in Nellai

9.8.2023
நெல்லையில் வீட்டில் கஞ்சா பதுக்கிய சிறுவன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கஞ்சா

நெல்லை பாளையங்கோட்டை காவல் நிலைய தலைமை காவலர் பெக்கின் அப்பகுதியில் ரோந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு 2 பேர் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டி ந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.
இதனால் சந்தேகமடைந்த தலைமை காவலர், 2 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் சந்திப்பு சிந்துபூந்துரை கீழத்தெருவை சேர்ந்த பாஸ்கர் (வயது 25) மற்றும் 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. மேலும் கஞ்சா பதுக்கி விற்பனையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் அவர்கள் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு 1½ கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார் அங்கிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *