June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

புளியங்குடியில் அண்ணன் மகனை வெட்டிக் கொன்ற 2 சித்தப்பாக்கள் கைது

1 min read

2 stepfathers arrested for killing brother’s son in Buliangudi

12.8.2023
தென்காசி மாவட்டம் புளியங்குடியில் இடப் பிரச்சனை சம்பந்தமாக அண்ணன் மகனை வெட்டிக்கொன்ற இரண்டு சித்தப்பாக்களை போலீசார் கைது செய்தனர்.

கொலை

தென்காசி மாவட்டம் புளியங்குடி சிந்தாமணி முத்து மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோட்டூரான் இவரது மகன் வீராசாமி இவரது மனைவி மாரியம்மாள் இவர்களுக்கு இளையராஜா (வயது 19) என்ற மகனும் ஒரு மகளும் உள்ளனர். இளையராஜா கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கும் இவரது சித்தப்பா செல்லச்சாமி (வயது 35) இருவருக்கும் இடையே இடப்பிரச்சனை தொடர்பாக முன் விரோதம் இருந்துள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலையில் இளையராஜாவுக்கும் அவரது சித்தப்பா செல்லச்சாமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரம் அடைந்த செல்லச்சாமி மண்வெட்டியால் இளையராஜாவின் தலையில் சரமாரியாக வெட்டியுள்ளார்.

இதில் பலத்த காயம் அடைந்த இளையராஜா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இதை பார்த்த செல்லச்சாமி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.இளையராஜா கொலை செய்யப்பட்டதை அறிந்த அவரது குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர்.

இது பற்றி தகவல் அறிந்த புளியங்குடி டிஎஸ்பி அசோக் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர் அங்கு ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்த இளையராஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை மருத்துவக் கல்லூரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் கோட்டூராணுக்கு வீராசாமி (வயது 43) செல்லத்துரை (வயது 40) செல்லச்சாமி (வயது 38) ஆகிய மூன்று மகன்களும் 4 மகள்களும் உள்ளனர் கோட்டூராணுக்கு சொந்தமான 4 சென்ட் இடத்தில் மூன்று மகன்களும் தலா ஒரு சென்ட் நிலத்தில் அடுத்தடுத்து வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர். மற்றொரு செண்ட் நிலத்தில் கோட்டூரான் தனியாக வசித்து வருகிறார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வீராசாமி வீடு கட்டிய போது கடன் பிரச்சனை ஏற்பட்டதால் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இதனால் அவரது மகன் இளையராஜா கூலி வேலைக்கு சென்று வந்தார் இளையராஜாவின் குடும்பத்தினர் தாத்தா கோட்டூரானுடன் வசித்து வந்தனர்.

இந்நிலையில் கோட்டூரான் வீட்டில் இளையராஜா குடும்பத்தினர் வசிக்கக் கூடாது என்று இளையராஜாவிடம் அவரது சித்தப்பா செல்லச்சாமி அடிக்கடி தகராறு செய்துள்ளார். இது தொடர்பாக புளியங்குடி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது .

அதனைத் தொடர்ந்து இரு தரப்பினரையும் அழைத்து போலீசார் விசாரித்தனர். அப்போது இளையராஜா தங்களது வீட்டின் கட்டுமான பணிகளை ஒரு மாதத்தில் முடித்துவிட்டு புதிய வீட்டுக்கு குடி பெயர்ந்து விடுவோம் என்று கூறினார்.

இதனை ஏற்றுக் கொள்ள மறுத்த சித்தப்பா செல்லச்சாமி ஆத்திரத்தில் தனது அண்ணன் மகன் இளையராஜாவை மண்வெட்டியால் வெட்டி கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது

அதனைத் தொடர்ந்து புளியங்குடி போலீசார் இளையராஜாவை வெட்டிக்கொலை செய்த செல்லச்சாமி மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட செல்லத்துரை ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்
ஒரு செண்ட் நிலத்திற்காக ஏற்ப்பட்ட பிரச்சினையில் உடன் பிறந்த அண்ணன் மகனை சித்தப்பாவே வெட்டி கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *