சுதந்திரதின விழாவை முன்னிட்டு சென்னை கோட்டையில் இன்று போலீஸ் அணிவகுப்பு ஒத்திகை
1 min read
Police parade rehearsal at Chennai Fort today on the occasion of Independence Day
13.8.2023
76-வது சுதந்திர தின விழா நாளை மறுநாள் (15-ந்தேதி) நாடு முழுவ தும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
சென்னை காமராஜர் சாலையில் கோட்டை கொத்தளத்தில் நடைபெறும் சுதந்திர தின நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடி ஏற்ற உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன. சுதந்திர தினவிழாவில் காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதையொட்டி இதற்கான இறுதி ஒத்திகை நிகழ்ச்சி இன்று சென்னை கோட்டை கொத்தளத்தில் நடந்தது.
இதில் போலீசார் சீருடையில் அணி வகுத்தனர். இதையும் படியுங்கள்: வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவியிடம் குழந்தையை கொடுத்து சென்ற இளம்பெண்- யார்? போலீஸ் விசாரணை இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் சுதந்திரதினத்தன்று முதலமைச்சரை காவல்துறை வாகன அணி வகுப்புடன் அழைத்து வருவது போன்று ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது. அதனை தொடர்ந்து கமாண்டோ படை, குதிரைப் படை, பெண் காவலர்கள் உள்ளிட்ட 7 படைப்பிரிவினர் பங்கேற்ற அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் ஏற்றுக் கொண்டு தேசிய கொடியைஏற்றி பேசுவது போன்று ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
அதன் பின் தகைசால் தமிழர் விருது, ஏபிஜே அப்துல்கலாம் விருது, துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா உள்ளிட்ட விருதுகள் வழங்குவது போன்று ஒத்திகை நடந்தது. இதையொட்டி இன்று காலை காமராஜர் சாலை பகுதியில் போக்குவரத்துக்கு தடைவிதிக்கப்பட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. காலை 8 மணி முதல் ஒத்திகை நிகழ்ச்சி முடிவடைந்த 10 மணி வரையிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.நேப்பியர் பாலம் முதல் போர் நினைவுச் சின்னம் வரை உள்ள காமராஜர் சாலை, போர் நினைவுச் சின்னத்தில் இருந்து ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வடக்கு பகுதி வரை உள்ள ராஜாஜி சாலை, கொடிமரச் சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது போலீசாரின் அணி வகுப்பு ஒத்திகையையொட்டி இன்று சென்னை தலைமைச்செயலகம் அமைந்துள்ள கோட்டை கொத்தளம், மற்றும் காமராஜர் சாலை முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இதில் ஏராளமான போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்கள்.