June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

ஜெயலலிதா தாக்கப்பட்டபோது திருநாவுக்கரசர் சாத்தூர் ராமச்சந்திரன் தடுத்தனர்- எடப்பாடி பழனிசாமி பேட்டி

1 min read

When Jayalalitha was attacked, Tirunavukarasar Chatur Ramachandran stopped her – Edappadi Palaniswami interview

13.8.2023
சட்டசபையில் ஜெயலலிதா தாக்கப்பட்டபோது திருநாவுக்கரசர் சாத்தூர் ராமச்சந்திரன் தடுத்ததாக எடப்பாடி பழனிசாமி கூறினார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மதுரை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஜெயலலிதா

ஜெயலலிதாவுக்கு எதிராக கொடூர தாக்குதல் நடைபெற்றது. திட்டமிட்டு அன்றைய முதல்வர் கருணாநிதி சில கருத்துக்களை பேசியபோதுதான் இந்த பிரச்சனை ஏற்பட்டது. அந்த கருத்தெல்லாம் பத்திரிகையில் விளக்கமாக வந்துள்ளது. அதையொட்டிதான் அப்போதைய எதிர்க்கட்சி தலைவர் ஜெயலலிதா பேச முயற்சி செய்தபோது கொடூரமான தாக்குதல் கருணாநிதி முன்னிலையிலேயே நடந்தது. அன்றைய அமைச்சர்கள், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெயலலிதாவை கடுமையாக தாக்கினாரக்ள். திருநாவுக்கரசு மற்றும் கேகேஎஸ்எஸ்ஆர் ஆகியோர் தடுத்தார்கள். அதை நாங்கள் பார்த்துக்கொண்டுதான் இருந்தோம்.

தடுத்துக் கொண்டிருக்கும்போது திமுக மூத்த அமைச்சர் ஒருவர் அம்மாவின் சேலையை பிடித்து இழுக்க, அமைச்சர்கள் ஜெயலலிதாவின் தலைமுடியை பிடித்து இழுக்க மிகப்பெரிய கோரமான காட்சி சட்மன்றத்தில் அரங்கேறியது.
கருப்பு தினம்

1989-ம் ஆண்டு மார்ச் 25-ந்தேதி, அன்றைய தினத்தை ஒரு கருப்பு தினமாக இன்றும் பார்க்கப்படுகிறது. அந்த நிகழ்வு என் மனதில் இடம் பெற்றுள்ளது. அன்றைய தினம் நான் சட்டமன்றத்தில் இருந்த காரணத்தினாலேயே இதை தெரிவிக்கின்றேன். இப்படிபட்ட கொடுமையான நிகழ்வுகள் சட்டமன்ற வரலாற்றிலேயே நடைபெற்றது இல்லை. அதுவும் பெண் உறுப்பினர், பெண் எதிர்க்கட்சி தலைவருக்கு நடந்தது கிடையாது.

ஆனால் இன்றைய முதலமைச்சர் அதை கொச்சைப்படுத்தி பேசுகிறார். எல்லாமே பத்திரிகையில் வந்த செய்தி. ஊடத்தில் வந்துள்ளது. 1989-ல் நடந்ததை தற்போது பேசுகிறார். சட்டமன்றத்தில் என்ன நடந்தது என்பது பத்திரிகையில் வந்ததனால்தான் அடுத்த தேர்தலில் மக்கள் தகுந்த பாடத்தை புகுத்தினார்கள். மீண்டும் சட்டசபைக்குள் நுழையும்போது தமிழக மக்களின் பேராதரவோடு, முதலமைச்சராக நுழைவேன் என்று சபதம் ஏற்று சென்றார். இதனால் மக்கள் 1991 தேர்தலில் திமுக-விற்கு மிகப்பெரிய தோல்வியை கொடுத்தார்கள். இதனால் உண்மை வென்றது. தர்மம் வென்றது. இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தவறான தகவலை, பொய்யான தகவலை வேண்டுமென்றே திட்டமிட்டு வெளியிட்டிருக்கிறார். இது கடும் கண்டனத்திற்குரியது. நாடாளுமன்றத்தில் மக்கள் இதற்கு தகுந்த பாடத்தை புகுட்டுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *