June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

குருவாயூர் – மதுரை ரயில் 27 ந் தேதி முதல் இயக்கம்

1 min read

Guruvayur – Madurai train will run from 27th

19.8.2023
குருவாயூர் – மதுரை நேரடி ரயில் வரும் 27.08.2023 முதல் தென்காசி – கடையநல்லூர் – சங்கரன்கோவில், ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர் வழியாக வரும் 27.08.2023 முதல் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது பற்றி ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினரும் தகவல் உரிமை சட்ட செயற்பாட்டாளருமான பொறியாளர்
இரா. பாண்டியராஜா கூறியிருப்பதாவது:-

தென்காசி மாவட்ட அனைத்து தரப்பு மக்களின் நீண்ட கால கோரிக்கையான குருவாயூர் – மதுரை நேரடி ரயில் தென்காசி – கடையநல்லூர் – சங்கரன் கோவில், ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர் வழியாக வரும் 27.08.2023 முதல் இயக்கப்பட உள்ளது.
இது மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பியின் இரண்டாண்டு தொடர் கோரிக்கைக்கு கிடைத்த மகத்தான வெற்றி ஆகும். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து எழுப்பிய கோரிக்கை, கடைசியாக 11.08.2023 அன்று ரயில்வே அமைச்சரிடம் நேரில் கடிதம் தந்து வலியுறுத்திய கோரிக்கையின் அடிப்படை யில், மதுரையில் இருந்து விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்ப கோவில்சந்தை, கடைய நல்லூர், தென்காசி, செங்கோட்டை வழியாக 27.08.23 முதல் குருவாயூர்- மதுரை- குருவாயூர் விரைவு வண்டி இயக்கப்படும்
என தெற்கு இரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வண்டி எண்: 16327 (மதுரை-குருவாயூர்) 27.08.23 முதல்
மதுரை புறப்பாடு- மதியம் 11:20 குருவாயூர் வருகை- அதிகாலை 02:10
வண்டி எண்: 16328 (குருவாயூர்-மதுரை) 28.08.23 முதல்
குருவாயூர் புறப்பாடு-
காலை 05:50
மதுரை வருகை- இரவு 07:15
இந்த ரயிலில் முன்பதிவு இல்லாத பெட்டிகள்: 11
ஸ்லீப்பர் பெட்டிகள்: 2
மூன்றடுக்கு ஏ/சி பெட்டி 1
என் மொத்தம்: 14 பெட்டிகள் இணைத்து இயக்கப்படும்.
இந்த ரயிலுக்கான முன்பதிவு விரைவில் துவங்க உள்ளது.
இனி விருதுநகர், நெல்லை மேற்கு பகுதி மற்றும் தென்காசி மாவட்ட மக்கள் நேரடியாக குருவாயூர் செல்வதற்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.

என் கடன் பணி செய்து கிடப்பதே என்று எண்ணத்தோடு,
மக்களின் கோரிக்கைகளை உரிய அதிகாரிகளிடம் எடுத்துச் சென்று தொடர்ந்து ரயில்களையும், ரயில் நிறுத்தங்களையும் பெற்று தந்து கொண்டிருக்கும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி அவர்களுக்கு தென் மாவட்ட மக்களின் நன்றியினை தெரிவித்து மகிழ்கின்றோம்..

என்னைப் போன்றோர் தெரிவிக்கும் கோரிக்கை களை வைகோ எம்.பி. அவர்களின் கவனத்திற்கு உடனுக்குடன் கொண்டு சென்று மக்கள் பணிகளுக்கு உதவுகின்ற ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரை வைகோ, ம.தி.மு.க. துணைப்பொதுச் செயலாளர் வழக்கறிஞர் திருமலாபுரம்
தி.மு. இராசேந்திரன்,
தென்காசி தெற்கு மாவட்ட ம.தி.மு.க செயலாளர் இராம.உதயசூரியன்,
வைகோ எம்.பியின் டெல்லி உதவியாளர் அ. செந்தூர் பாண்டியன் ஆகியோருக்கும் நன்றி! இவ்வாறு ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினரும் தகவல் உரிமை சட்ட செயற்பாட்டா ளருமான பொறியாளர்
இரா.பாண்டிய ராஜா தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *