தென்காசியில் ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரிகள் நலச்சங்க கூட்டம்- இசையமைப்பாளர் பரத்வாஜ் பங்கேற்பு
1 min read
Tenkasi Retired Police Officers Welfare Association Meeting – Music Composer Bharadwaj Participation
28.8.2023
தென்காசியில் நெல்லை மாநகர மற்றும் நெல்லை சரக ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரிகள் நலச்சங்க கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்திற்கு ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர் மாடசாமி தலைமை வகித்தார். திரைப்பட இசை அமைப்பாளர் பரத்வாஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து பணியிலுள்ள மற்றும் ஒய்வு பெற்ற காவலர் குடும்பத்தினரின் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கும்,
பரிசு வழங்கியும், சிறப்பாக நேர்மையாக பணியாற்றி வரும் திருநெல்வேலி மாவட்டம் மானூர் காவல் நிலையம் இன்ஸ்பெக்டர் சபாபதி, மாநகர இன்ஸ்பெக்டர் முருகன், தென்காசி மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் தாமரை விஷ்ணு ஆகியோருக்கு கேடயம் வழங்கப்பட்டது. பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஏற்பாடுகளை சங்க தலைவர் பரமசிவன், செயலாளர் சுரேஷ், சங்க துணைச் செயலாளர் அய்யப்பன், ஒருங்கிணைப்பார் முருகானந்தம், துணை செயலாளர் சீனி வாசராகவன் செய்திருந்தனர்.
முடிவில் ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரிகள் நலச்சங்கத்தின் தலைவர் பரமசிவன் அனைவருக்கும் நன்றி கூறினார்.