June 18, 2025

Seithi Saral

Tamil News Channel

செப்டம்பர் 18-ந்தேதி விநாயகர் சதுர்த்தி விடுமுறை: தமிழ்நாடு அரசு தகவல்

1 min read

September 18-Vinayak Chaturthi Holiday: Tamil Nadu Government Information

31.8.2023
விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 18-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. ஆனால் அதற்கு ஒருநாளுக்கு முன்பாக அரசு விடுமுறை அறிவித்துள்ளது. விநாயகர் சதுர்த்தி இந்த ஆண்டு செப்டம்பர் 18-ந் தேதி தான் கொண்டாடப்படுகிறது. பொதுவாக அமாவாசையில் இருந்து நான்காவது நாளே சதுர்த்தி வரும். அதன் அடிப்படையில் ஆவணி மாத அமாவாசையில் இருந்து 4-ம் நாளான செப்டம்பர் 18-ந் தேதியே விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும். இந்த விஷயத்தில் குழப்பம் தேவையில்லை என்று ஆற்காடு கா.வெ.சீத்தாராமைய்யர் சுத்த வாக்கிய சர்வமுகூர்த்த பஞ்சாங்க கணிதர் சுந்தர ராஜன் அய்யர் கூறி இருந்தார். இந்நிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி அரசு விடுமுறை செப்.18-ந்தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே செப்.17-ந்தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் செப்.18-ந்தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் செப்.17-ந்தேதி அறிவிக்கப்பட்ட விடுமுறை ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.