June 22, 2026

Seithi Saral

Tamil News Channel

ரூ.10 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் புளியறையி்ல் சிக்கியது: 3 பேர் கைது

1 min read

Tobacco products worth Rs 10 lakhs caught in the cellar: 3 people arrested‘

31.8.2023
தென்காசி மாவட்டம் புளியரை சோதனைச்சாவடியில் போலீசார் இன்று அதிகாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு காரை மறித்து சோதனை செய்தனர். அதில் மூட்டைகளில் 1,250 கிலோ குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து காரில் வந்தவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் செங்கோட்டையை சேர்ந்த செண்பகராஜன் (31), சாத்தான்குளம் அருகே உள்ள கீழ செட்டிக்குளத்தை சேர்ந்த அஜய்சதீஷ் (24), கிருபாகரன் (35) என்பதும், அவர்கள் கேரளாவில் இருந்து புகையிலை பொருட்களை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ. 10 லட்சம் ஆகும். இதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் கைது செய்த போலீசார் கார் மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட செண்பகராஜன் செங்கோட்டை நகராட்சியின் கவுன்சிலர் ஆவார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *