திருப்பதி கோவிலில் ஆகஸ்டு மாதம் ரூ.120 கோடி காணிக்கை
1 min read
120 crores of offering in Tirupati temple in August
4.9.2023
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் தரிசனம், தலைமுடி மற்றும் உண்டியல் காணிக்கை எண்ணிக்கை விவரங்கள் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, கடந்த ஆகஸ்டு மாதம் 1-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை 22 லட்சத்து 25 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இவர்களில் 9.7 லட்சம் பக்தர்கள் மொட்டையடித்து தலைமுடியை காணிக்கையாக செலுத்தியுள்ளனர். சாமி தரிசனம் செய்த பக்தர்கள் கோவில் உண்டியலில் ரூ.120 கோடியே 5 லட்சம் காணிக்கையாக செலுத்தி உள்ளனர். பக்தர்களுக்கு 1 கோடியே 9 லட்சம் லட்டுகள் பிரசாதமாக வழங்கப்பட்டுள்ளன. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஞாயிற்றுக்கழிமை 67,193 பேர் சாமி தரிசனம் செய்தனர். 28,750 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர் . ரூ.3.62 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
இன்று காலையில் நேரடி இலவச தரிசனத்தில் 14 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.