குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளிடம் நகை திருடியவர் கைது
1 min read
Man arrested for stealing jewelery from tourists in Courtalam
4.9.2023
குற்றாலத்தில் சீசன் காலத்தில் அருவிகளில் குளிக்கும் சுற்றுலா பயணிகளிடம் தொடர்ந்து நகை பறிப்பில் ஈடுபட்டு வந்த திருப்பத்தூரை சேர்ந்தவரை குற்றாலம் போலீசார் கைது செய்தனர் அவரிடம் இருந்து 64 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்துள்ளனர்
குற்றாலத்தில் சீசன் காலங்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை பயன்படுத்தி அருவிகளில் குளிக்கும் போது ஆண்கள் மற்றும் பெண்கள் கழுத்தில் அணிந்திருந்த தங்கச்செயின் உள்ளிட்ட நகைகளை பறித்து விட்டதாக பல்வேறு புகார்கள் குற்றாலம் காவல் நிலையத்திற்கு வந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து குற்றாலம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து குற்றாலம் அருவிப் பகுதிகளில் வைக்கப் பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை தீவிரமாக ஆய்வு செய்தனர். அப்போது தொடர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபர் திருப்பத்தூர் மாவட்டத்தைச் சார்ந்த ராஜகோபால்
(வயது 45) என்பதை கண்டறிந்தனர்.
உடனடியாக குற்றாலம் போலீசார் திருப்பத்தூர் சென்று ராஜகோபாலை பிடித்து வந்தனர். அதன்பின் அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் 16 தங்கச் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.
உடனடியாக அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 64 பவுன் எடையுள்ள தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். குற்றவாளி ராஜகோபாலிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 64 பவுன் தங்க நகைகளை தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப் பாளர் சாம்சன், துணை கண்காணிப்பாளர் நாக சங்கர், குற்றாலம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜகுமாரி ஆகியோர் பார்வையிட்டனர்.