June 12, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி அருகே ஓடும் பஸ்சில் நகை பறித்த பெண் கைது

1 min read

Woman arrested for snatching jewelery from a bus running near Tenkasi

11.9.2023

தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் ஓடும் பஸ்சில் நகை பறித்த பெண்ணை போலீசார் கைது செய்தனர் அவரிடம் இருந்து ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான பத்து பவுன் தங்கச் சங்கிலி களை பறிமுதல் செய்தனர்.

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே சொக்கம்பட்டி திரிகூடபுரம் சேர்மன் தெருவை சேர்ந்தவர் இசக்கிமுத்து என்பவரது மனைவி சண்முகத்தாய் (வயது 58). இவர் கடந்த 3-ம் தேதி தன்னுடைய உறவினர் வீடான அச்சன்புதூருக்கு கடையநல்லூர் அரசு மருத்துவமனை பஸ் நிறுத்தத்தில் இருந்து பஸ் ஏறிச் சென்ற போது அவரது கழுத்தில் கிடந்த 18 கிராம் தங்கச் சங்கி லியை மர்ம நபர்கள் யாரோ | பறித்துச் சென்றனர்.

அதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 28-6 தேதி கடையநல்லூர் முத்துகிருஷ்ணாபுரம் பெரிய தெரு சேர்த்தியன் மனைவி ஜோதியாலா (வயது 26) என்பவர் தனது மகள் மான்சிக்கு உடல் நிலை சரி இல்லாததால் கடையநல்லூர் அரசு மருத்துவமனை பஸ் நிறுத்தத்தில் இருந்து தென்காசி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தார். அப்போது அவாது மகள் கழுத்தில் கிடந்த 24 கிராம் தங்கச் சங்கிலியை மர்ம நபர் பரித்துச் சென்றனர்

இந்த இரு சம்பவங்கள் தொடர்பான புகாரின் பேரில் கடையநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் ராஜா தலைமையில் உதவி ஆய்வாளர் கருப்ப சாமி பாண்டியன் மற்றும் போலீசார் தனிப்படை அமைத்து கடையநல்லூர் பஸ்நிலையங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக் களை ஆய்வு செய்தனர்.
அப்போது கடையநல்லூர் ஆஸ்பத்திரி பஸ்நிறுத்தத்தில் பர்தா அணிந்த 2 பெண்கள் சிறுமி மான்சி கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற காட்சி தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி கடையநல்லூர் புதிய பஸ் நிலையத்தில நின்று கொண்டிருந்த அந்தப் பெண்ணை கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள மந்தி தோப்பு பகுதியைச் சேர்ந்த ராஜகோபால் நகர் திருப்பதி என்பவரின் மனைவி அய்யம்மாள் வயது 35 என்பது தெரியவந்து ள்ளது.

மேலும் விசாரணையில் தமிழகத்தில் எந்தெந்த கோவில்களில் எந்தெந்த தேதியில் திருவிழா வருகிறது என்பதை முன்கூட்டியே அறிந்து அந்தப் பகுதிகளுக்கு சென்று கூட்டம் நெரிசலை பயன்படுத்தி பக்தரைப் போல் வேஷமிட்டு நகை பணத்தைப் பறித்து செல்வதும் பஸ் நிலையம் கூட்டம் நெரிசல் போன்ற இடங்களில் கைவரிசை காட்டியதும் தெரிய வந்தது அதனை தொடர்ந்து அய்யம்மாளிடமிருந்து ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான பத்து பவுன் தங்க சங்கிலிகளை போலீசார் மீட்டனர். பின்னர் அவரை தென்காசி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினார்கள் நீதிபதி அவரை திருநெல்வேலி கொக்கர குளத்தில் உள்ள பெண்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *