June 12, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி அருகே மரம் விழுந்து இளைஞர் பலி

1 min read
Seithi Saral featured Image

Youth dies after tree falls near Tenkasi

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள நெய் அருவியில் குளிக்கச் சென்ற இளைஞர் மீது மரம் விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை மேலூர் பம்பு ஹவுஸ் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் நவாஸ் இவரது மகன் முகமதுதமீன்(வயது 23) இவர் பிளஸ் டூ படித்து முடித்துவிட்டு வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்வதற்காக முயற்சி செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முகம்மது தமீன் தனது நண்பர்களுடன் செங்கோட்டை அருகே உள்ள கண்ணுப்புளி மெடடு பகுதியில் உள்ள நெய் அருவிக்கு குளிக்க சென்றுள்ளார்ஹ அப்போது அனைவரும் நெய்அருவியில் குளித்துக் கொண்டிருந்தபோது முகமது தமீம் மட்டும் ஒரு மரத்தடியில் உட்கார்ந்து கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் பலத்த காற்றுவீசியுள்ளது.
இதனால் அந்தப் பகுதியில் நின்று கொண்டிருந்த மரம் சரிந்து விழுந்தது. அதில் மரத்தின் அடியில் உட்கார்ந்து இருந்த முகமது தமீன் மீது அந்த மரம் விழுந்தது இதனால் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இது பற்றி தகவல் அறிந்த செங்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மரத்தை இயந்திரம் மூலம் அறுத்து எடுத்து அதில் சிக்கிய முகமது தமின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக செங்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *