June 14, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி மாவட்ட ஊராட்சி குழுக்கூட்டத்தில் ரூ.49 லட்சம் செலவில் வளர்ச்சி பணிகள் செய்ய தீர்மானம்

1 min read
Seithi Saral featured Image

In Tenkasi District Panchayat Committee meeting, it was decided to carry out development works at a cost of Rs. 49 lakhs

21.9.2023
தென்காசி மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர்.அலுவ லக மினி கூட்டரங்கில் வைத்து நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சுமார் 49 லட்ச ரூபாய் செலவில் பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த கூட்டத்திற்கு தென்காசி மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சு.தமிழ்ச்செல்வி போஸ் தலைமை வகித்தார்.
மாவட்ட ஊராட்சிகுழு துணை தலைவர் ஆயிரப்பேரி தி. உதய கிருஷ்ணன் மாவட்ட ஊராட்சி செயலாளர் ருக் மணி ஆகியோர் முன்னிலை வைத்தனர். இந்த கூட்டத்தில். 9 தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

இதில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, தார் சாலை அமைக்கும் பணி அங்கன்வாடி பராமரிப்பு மற்றும் வாறுகால் அமைக்கும் பணிக்காக ரூ.48 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் கடந்த கூட்டத்தில் போடப்பட்ட தீர்மானங்கள் ரத்து செய் யப்பட்டு புதிதாக வேறு பகுதிகளுக்கு சிமெண்ட் சாலை, தார் சாலை, வாறு கால் அமைக்கும் பணிக் கான ரூ. 44 லட்சத்தி 80 ஆயிரம் மதிப்பிலான தீர்மானங்களும் ஏக மனதாக நிறைவேற்றப் பட்டது.

14 மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களை கொண்ட இந்தகூட்டத்தில் தலைவர் துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் என 12 பேர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் பல்வேறு பணிகளுக்கான ரத்து செய்யப்பட்ட தீர்மா னங்களும் பல்வேறு புதிய பணிகளுக்கான நிதி ஒதுக் கீடு செய்யப்பட்ட தீர்மா னங்களும் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் சந்திர லீலா, மதி மாரிமுத்து, சுதா, கனிமொழி, தேவி, சுதா, பூங்கொடி, மைதீன்பீவி, சுப்பிரமணியன், முத்துலட்சுமி, ஆகியோர் கலந்து கொண்டனர்

கூட்ட முடிவில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சு.தமிழ்ச் செல்வி போஸ் அனைவருக்கும் நன்றி கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *