June 13, 2026

Seithi Saral

Tamil News Channel

பா.ஜனதா- அதிமுக இடையே பிரச்சனை இல்லை அண்ணாமலை பேட்டி

1 min read

There is no problem between BJP and AIADMK Annamalai interview

21.9.2023
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலைக்கும், அதிமுக தலைவர்களுக்கும் இடையில் கடந்த சில நாட்களாக வார்த்தைப்போர் நடைபெற்ற வந்தது. இறுதியாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பா.ஜனதாவுடன் கூட்டணி இல்லை என அறிவித்தார்.
இதுகுறித்து விவாதிக்கப்பட்ட நிலையில், கூட்டணி குறித்து வெளிப்படையில் பேச வேண்டாம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வாய்மொழி உத்தரவிட்டு மோதலுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இந்த நிலையில், நேற்று தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கோவை மாவட்டத்தில் பாத யாத்திரையை தொடங்க இருக்கிறார். அதற்கு முன்னதாக பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதாவை வரவேற்கிறோம். ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதால் அனைத்து கட்சிகளுக்கும் பாராட்டு
ஒரு எம்.பி. 22 லட்சம் மக்களை கையாள்வது எளிதாக விசயம் கிடையாது. மக்கள் தொகையை மட்டுமே வைத்து தொகுதி வரையறை இருக்கக்கூடாது. அதில் பல்வேறு காரணிகள் இருக்க வேண்டும்.
என்னை பொறுத்த வரையில் எனக்கும், அதிமுக-வுக்கும் இடையில் பிரச்சனை இல்லை. தமிழக பா.ஜனதாவுக்கும்- அதிமுக-வுக்கும் இடையில் பிரச்சனை இல்லை. இதில் தெளிவாக இருக்கிறோம் அதிமுகவில் உள்ள சில தலைவர்களுக்கும், எனக்கும் பிரச்சனை இருக்கலாம். ஏனென்றால் அவர்களுடைய பேச்சை வைத்து சொல்கிறேன்.

என்.டி.ஏ. கூட்டணியின் முக்கிய புள்ளியே பிரதமர் மோடிதான். அவரை 3-வது முறையாக பிரதமராக்க வேண்டும் என்பதுதான் பா.ஜனதாவின் நோக்கம். இதை அதிமுக ஏற்றுக் கொள்கிறது.
மத்தியில் பிரதமர் மோடியையும், தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமியையும் அறிவிக்க வேண்டும் என செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். இதைப்பற்றி தேசிய தலைவர்கள் கூற வேண்டும். நான் யாரையும், எங்கேயும் தவறாக பேசவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *