June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

கிளாம்பாக்கத்தில் ரூ.20 கோடி மதிப்பில் புதிய ரெயில் நிலையம்

1 min read

New railway station at Klambach at a cost of Rs.20 crore

7.10.2023
கிளாம்பாக்கம் அருகே 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய ரெயில் நிலையம் அமைக்க தெற்கு ரெயில்வே திட்டமிட்டுள்ளது.

கிளாம்பாக்கம்

தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு பேருந்து சேவை அளிக்கும் வகையில் தாம்பரத்தை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இதனிடையே பயணிகளின் வசதிக்காக தாம்பரம்-செங்கல்பட்டு வழித்தடத்தில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே ரெயில் நிலையம் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் கிளாம்பாக்கம் அருகே 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய ரெயில் நிலையம் அமைக்க தெற்கு ரெயில்வே திட்டமிட்டுள்ளது. புதிய ரெயில் நிலையம், நடைமேடைகள் தொடர்பான நிரந்தர பணிகளை மேற்கொள்ள டெண்டர் கோரப்பட்டுள்ளது. இது 3 நடைமேடைகள் கொண்ட ரெயில் நிலையமாக அமையவுள்ள நிலையில், இதனை ஓராண்டுக்குள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *