June 10, 2026

Seithi Saral

Tamil News Channel

கடையம் அருகே அரசுவேலை வாங்கித் தருவதாக 14லட்சம் மோசடி 4 பேர் கைது

1 min read

14 lakh fraud 4 people arrested near Kadayam

20/10/2023

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள வெய்க்காலிப்பட்டியில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூபாய் 14 லட்சம் மோசடி செய்த 4 பேர்களை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள வெய்க்காலிப்பட்டி கிராமம் சபரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் அவரது மனைவி ஜாய்லின் பாலா (வயது 40) இவர்களது மகன் ஜெயின் ஜோஸ் பாலிடெக்னிக் படித்துள்ளார்.

இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த சக்திவேல் மனைவி வசந்தி ஜாய்லின் பாலாவிடம் தனது கணவர் பலருக்கு அரசு வேலை வாங்கிக் கொடுத்துள்ளதாகவும் அதைப்போலவே ஜெயின் ஜோசுவுக்கும் அரசு வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார்.

அதை நம்பி ஜாய்லின் பாலா சிறிது சிறிதாக ரூபாய் 14 லட்சம் வரை கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் நீண்ட நாட்களாகியும் வேலை வாங்கிக் கொடுக்காததால் ஜாய்லின் பாலா தான் கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு வசந்தியிடம் கேட்டுள்ளார்.

அதற்கு வசந்தியின் கணவர் சக்திவேல் (வயது 44) அவரது சகோதரர் லட்சுமணன் (வயது 46) துரைச்சாமியாபுரம் சுப்பிரமணியன் மகன் முருகன் (வயது 37) ஆகியோர் பணத்தை திருப்பி தர முடியாது என்று கூறி ஜாய்லின் பாலாவை தாக்கியதாக கூறப்படுகிறது .
இது பற்றி ஜாய்லின் பாலா கடையம் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதன்படி கடையம் காவல் நிலைய. கௌதமன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார் அதனை தொடர்ந்து சக்திவேல், வசந்தி, லட்சுமணன், முருகன் ஆகிய நான்கு பேர்களையும் கைது செய்தார்..

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *