June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

உயிர் காக்கும் மனிதாபிமானஉதவிப் பொருள்களை காசாவுக்கு இந்தியா அனுப்பியது

1 min read

India sent life-saving humanitarian aid to Gaza

22.10.2023
உயிர் காக்கும் மனிதாபிமான உதவிப் பொருள்களை காசாவுக்கு இந்தியா அனுப்பி வைத்தது.

இஸ்ரேல் மீது தாக்குதல்

இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய ஹமாஸ் பயங்கரவாதிகள், பலரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். அதற்கு பதிலடியாக காசாவில் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது.

நேற்றுமுன்தினம் வரை காசாவில் 4,385 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இஸ்ரேலில் 1,400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். காசாவில் 13,561 பேர் காயம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில், உயிர் வாழத் தேவையான அத்தியாவசிய பொருள்கள் அடங்கிய விமானத்தை இந்தியா இன்று அனுப்பியுள்ளது என வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், காசாவில் தவித்து வரும் பாலஸ்தீனர்களுக்காக உயிர் காக்கும் மருந்துகள், வெட்ட வெளியில் படுக்கும் வகையில் ஸ்லீப்பர் பேக், தார்ப்பாலின், மாத்திரைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் முதல் கட்டமாக அனுப்பப்பட்டு உள்ளன என பதிவிட்டுள்ளார். மேலும், இந்திய மக்களின் அன்புப் பரிசு என பதிவிட்டுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *