தமிழகத்தில் 6.11 கோடி வாக்காளர்கள்: ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம்
1 min read
6.11 crore voters in Tamil Nadu: Female voters are more than male
27/10/2023
தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் கமிஷனர் சத்யபிரதா சாஹூ வெளியிட்டார். மொத்தம் 6.11 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.
தலைமைச் செயலகத்தில், வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டு சத்யபிரதா சாகு கூறியதாவது:-
தமிழகத்தில் 6.11 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அதில் 3 கோடி பேர் ஆண்கள் 3.11 கோடி பெண்கள். 3ம் பாலினத்தவர்கள் எண்ணிக்கை 8, 010. 18 வயது நிரம்பிய முதல் தலைமுறை வாக்காளர்கள் எண்ணிக்கை 3.94 லட்சம்.
அதிக வாக்காளர்கள் கொண்ட சட்டசபை தொகுதியாக சோழிங்கநல்லூர் தொகுதி உள்ளது. இங்கு 6.52 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். குறைந்த வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தொகுதி 1.69 லட்சம் வாக்காளர்களுடன் உள்ளது.
பட்டியலில் பெயர் விடுபட்டிருந்தால், வாக்காளர்கள் விண்ணப்பிக்கலாம். வாக்காளர் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் ஆகியவற்றுக்கு நேரடியாகவோ அல்லது தேர்தல் கமிஷன் இணையதளம் மூலம் வாயிலாகவோ விண்ணப்பிக்கலாம்.9ம் தேதி ஓட்டுச்சாவடிகளில் வரைவு வாக்காளர் பட்டியல் வைக்கப்படும். பொது மக்கள் அனைவரும், தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
இறுதி வாக்காளர் 2024 ஜன.,5ல் வெளியீடப்படும். 17 வயது நிரம்பியவர்கள், தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பிக்கலாம். 17 வயதில் விண்ணப்பித்தால் 18 வயது பூர்த்தியாகும் காலாண்டில் அவர்களது பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.