June 7, 2026

Seithi Saral

Tamil News Channel

ஆற்காடில் பவுர்ணமி அன்னதானம் தொடக்க விழா

1 min read

Inauguration of Pournami Annadanam in Arkad

27.10.2023
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பேருந்து நிலையத்தில் ஸ்ரீ ஜோதி லிங்கேஸ்வர் சிவனடியார் சேவா சேரிட்டபுள் டிரஸ்ட் சார்பாக மாதந்தோறும் பௌர்ணமி அன்று நடைபெற்றும் அன்னதான துவக்க விழா நிகழ்ச்சிக்கு நிறுவன தலைவர் ஜெய்மாருதி சரவணன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக திருக்கழுக்குன்றம் சிவதிரு. தாமோதரன் ஐயா அவர்கள் திருக்கரங்களால் அன்னதான நிகழ்ச்சி துவங்கப்பட்டது. இதில் பாலாற்றங்கரை அருகாமையில் இருந்து மேளதாளம், வானவேடிக்கையுடன் தாமோதரன் ஐயாவை ஊர்வலமாக அழைத்து வந்தனர். இதில் ஆற்காடு முக்கிய பிரமுகர்கள் ஜெ.லட்சுமணன், பொன்.கு.சரவணன், கணேஷ், கே.எம். பாலு, உதயசங்கர், ஹேம்நாத், சந்திரமோகன், பைனான்ஸ் ரவிச்சந்திரன், பர்குணன் மற்றும் டிரஸ்ட் நிர்வாகிகள் ரவி, வெங்கடேசன், விஜயகுமார், ராஜி, ஜெயக்குமார், தரணி, பாலாஜி, சண்முகம், அருண் சுரேஷ்குமார் ,ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதில் முன்னதாக பூக்களால் அலங்கரிக்கப்பட்ட நடராஜரின் திருவுருவ சிலைக்கு சிறப்பு பூஜை செய்து பரதஷேத்ரா நாட்டிய பள்ளியின் குரு சரஸ்வதி பாபு அவர்களின் தலைமையில் மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.மேலும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு நல திட்ட உதவிகள் வழங்கி அன்னதான நிகழ்ச்சி துவக்கி வைத்து சிறப்பித்தார். இதில் சிவனடியார்கள், பொதுமக்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இறுதியாக ரவிச்சந்திரன் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
-சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *