June 22, 2026

Seithi Saral

Tamil News Channel

குற்றாலத்தில் சோப்பு போட்டு குளிக்க வேண்டாமே

1 min read

Do not bathe with soap in the toilet

27.10.2023
குற்றாலத்தில் விதிமுறையை மீறி சிலர் சோப்பு போட்டு குளிக்கிறார்கள். இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குற்றால சீசன்

குற்றால சீசன் வழக்கமாக ஜூன் மாதம் தொடங்கும். இந்த ஆண்டு குறிப்பிட்ட காலத்தில் சீசன் தொடங்கவில்லை. காரணம் தென்மேற்கு பருவமழை காலம் தவறியதால்தான் சீசன் ஆரம்பிக்கவில்லை. அதோடு தென்காசி, நெல்லை மாவட்டங்களில் விவசாயப் பணிகளும் பாதிக்கப்பட்டன.
ஆனால் காலதாமதாக பெய்த மழையால் தற்போது தொடர்ந்து எல்லா அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்கும் காலம் என்பதால் நல்ல குளுகுளு சீசன் போல் குற்றாலம் காட்சி அளிக்கிறது.
ஆனாலும் சீசன் காலம் போல் சுற்றுலாப்பயணிகளின் கூட்டம் அதிகம் இல்லை. விடுமுறை நாட்களில் மட்டும் அதிக பயணிகள் வருகிறார்கள்.
கூட்டம் அதிகம் இல்லாத காரணத்தால் வருவோர் அருவிகளில் ஆனந்தமாக குளிக்கிறார்கள்.
அதே நேரம் சிலர் விதிமுறையை மீறி அருவியில் சோம்பு, சாம்பு போட்டு குறிக்கிறர்கள். ஐந்தருவியில் சிலர் சோப்பு போட்டு குளித்தார்கள்.
சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக அருவிகளில் சோப்பு, சாம்பு போட்டு குளிக்க கூடாது என்று தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த விதியை சிலர் தெரியாமல் உள்ளனர். யாராவது சோப்பு, சாம்பு போட்டால் போலீசார் உடனே அவர்களை திருப்பி அனுப்பி விடுவார்கள். அல்லது அபராதம் கூட விதிப்பது உண்டு. தற்போது கூட்டம் அதிகம் இல்லாததை பயன்படுத்தி சோப்பு சாம்பு போட்டு குளிப்பதை போலீசார் தடுக்க வேண்டும். மேலும் சுற்றுலாப்பயணிகளுக்கு தெரியும் வண்ணம் இதுபற்றிய அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்.
தற்போது குற்றாலம் அருவிகளில் தொடர்ந்து தண்ணீர் விழுவது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *