“ராகுல் காந்தியை பிரதமர் ஆக்குவது எங்களதுகுறிக்கோள்”- ஏ.எம்.முனிரத்தினம் எம்.எல்.ஏ. பேச்சு
1 min read“Our goal is to make Rahul Gandhi the Prime Minister” – AM Munirathanam MLA. Speech
29/10/2023
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்திய ஒற்றுமைக்காக நடைப்பயணம் மேற்கொண்டதின் நினைவு கூறும் விதமாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு வருகை தந்து கல்வெட்டு மற்றும் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டிருந்த கட்சியின் கொடிக்கம்பத்தை திறந்து வைத்தார்..
அதன் தொடர்ச்சியாக வாலாஜாபேட்டை ஒன்றியத்தின் சார்பில் வட்டாரத் தலைவர் வி.சி.மோட்டூர் கணேசன் தலைமையில் கல்புத்தூர், கல்மேல்குப்பம், அல்லிகுளம் கூட்ரோடு, அனந்தலை, வன்னிவேடு மோட்டூர், உள்ளிட்ட ஐந்து இடங்களில் சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.முனிரத்தினம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச் செயலாளர் அக்ரவரம் பாஸ்கர் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கல்வெட்டு மற்றும் கட்சியின் கொடியினை திறந்து வைத்து பொதுமக்கள் இனிப்புகளை வழங்கினார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.முனிரத்தினம் பேசுகையில், இந்த முறை மோடி ஆட்சிக்கு வந்து விட்டால் இதுவே கடைசி தேர்தலாக இருக்க நேரிடும் எனவும் ஆகவே தற்போது நடைபெற இருக்கும் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி நமது கட்சி இருந்தாலும் கூட்டணி கட்சி யாராக இருந்தாலும் ஜெயித்து ஒற்றுமையோடு செயல்பட்டு கடுமையான முறையில் தேர்தலை சந்தித்து மத்தியில் இளம் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் ஆக்குவதே எங்களது குறிக்கோள் என பேசினார்.
- செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார்..