எழுத்தாளர்கள் சிவசங்கரி, ஏ.கே.பெருமாளுக்கு பிரதமர் மோடி பாராட்டு
1 min readPM Modi praises writers Sivasankari, AK Perumal
29.10.2023
மன் கி பாத் நிகழ்ச்சியில் எழுத்தாளர்கள் எழுத்தாளர்கள் சிவசங்கரி, ஏ.கே.பெருமாளுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.
மன் கி பாத்
பிரதமர் நரேந்திர மோடி இன்று 106-வது மன் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
இந்த மாதம் காதி விற்பனை கடந்த கால சாதனைகளை முறியடித்துள்ளது. கடந்த காலங்களில் 30 ஆயிரம் கோடிக்கு மட்டுமே விற்பனையான காதி பொருட்கள் இந்த மாதம் ரூ.1.25 லட்சம் கோடிக்கு விற்பனை ஆகியுள்ளது.
விவசாயிகள், குடிசை தொழில் செய்வோர், கைவினைக் கலைஞர்கள் ஆகியோர் இந்த விற்பனையால் பயனடைந்துள்ளனர்.
சுற்றுலா செல்லும்போது, ஆன்மிக யாத்திரை மேற்கொள்ளும்போது அப்பகுதியில் தயாரிக்கப்படும் பொருட்களை வாங்குங்கள். உங்களது பட்ஜெட்டில் அதற்கு நிதி ஒதுக்குங்கள்.
பண்டிகை காலத்தில் உள்ளூர் பொருட்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.
சிவசங்கரி
தமிழ் எழுத்தாளர் சகோதரி சிவசங்கரி இலக்கியம் மூலம் ‛knit india’என்ற திட்டத்தை தயாரித்துள்ளார். இது இலக்கியம் மூலம் நாட்டை இணைப்பது ஆகும். இதற்காக அவர் கடந்த 16 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். அவர் 18 இந்திய மொழிகளில் எழுதப்பட்ட இலக்கியங்களை மொழி பெயர்த்துள்ளார்.
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலும், இம்பாலில் இருந்து ஜெய்சால்மர் வரையிலும் பலமுறை நாடு முழுவதும் பயணம் செய்து, பல்வேறு மாநிலங்களில் இருந்து எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களுடன் கலந்துரையாடினார்.
சிவசங்கரி பல்வேறு இடங்களுக்குச் சென்று பயணத் தகவல்களை வெளியிட்டார். இது தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் உள்ளது. இந்தத் திட்டத்தில் 4 பெரிய தொகுதிகள் உள்ளன, ஒவ்வொரு தொகுதியும் இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
ஏ.கே.பெருமாள்
இதேபோல, கன்னியாகுமரியைச் சேர்ந்த எழுத்தாளர் ஏ.கே.பெருமாளின் பணிகள் அனைவருக்கும் ஊக்கமளிப்பதாக உள்ளது. தமிழகத்தில் கதை சொல்லும் பாரம்பரியத்தை அவர் பாதுகாத்து வருகிறார். இந்தப் பணியில் 40 ஆண்டுகளாக அவர் பணியாற்றி வருகிறார். இதுவரை அவர் 100 புத்தகங்களை எழுதி உள்ளார்.
சிவசங்கரி, ஏ.கே.பெருமாளின் முயற்சிகள் அனைவராலும் பாராட்டக்கத்தக்கது என குறிப்பிட்டுள்ளார்.